• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கைநழுவுகிறதா தென் கொரிய கப்பல் கட்டும் நிறுவன முதலீடு? தமிழகத்திற்கு மேலும் ஒரு பின்னடைவு?!

    தமிழகத்தில் கப்பல் கட்டும் தளத்தில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தென் கொரியாவை சேர்ந்த நிறுவனத்துடன், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் பேச்சு நடத்திஉள்ளார்.
    Author By Pandian Sat, 11 Jul 2026 15:56:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Andhra-Eyes-Hyundai-Shipyard-Investment-Planned-for-Tamil-Nadu-Nara-Lokesh-Meets-Company

    தமிழகத்தில் ரூ.18,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ள தென் கொரியாவின் ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவனத்தை, ஆந்திரப் பிரதேசமும் முதலீட்டுக்காக அணுகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் புதிய அரசியல் மற்றும் தொழில்துறை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த முக்கிய முதலீட்டை தமிழகத்தில் உறுதி செய்ய அரசு தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.

    உலகின் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.டி. ஹூண்டாய், 2025 டிசம்பரில் தூத்துக்குடியில் ரூ.18,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த முதலீட்டை உறுதி செய்யும் முயற்சியாக, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் வழிகாட்டி (Guidance) நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த ஜூன் மாதம் தென் கொரியா சென்று ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியது. திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறும் அவர்கள் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் கூடுதலாக 100 MBBS இடங்களுக்கு அனுமதி! மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

    AndhraPradesh

    இதற்கிடையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான நாரா லோகேஷ் தென் கொரியாவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவன அதிகாரிகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தமிழகத்திற்கு வரவிருந்த முதலீடு ஆந்திராவுக்கு மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து தொழில்துறை அதிகாரிகள் கூறுகையில், முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் விரைவாக வழங்கப்பட்டு வருவதாகவும், ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவலை தெரிவித்துள்ளார். ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீட்டை தமிழகத்தில் உறுதி செய்ய அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழில்துறை வளர்ச்சியில் எந்தவித பின்னடைவும் ஏற்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை ஆந்திரா ஈர்த்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவனத்தின் திட்டம் தமிழகத்திலேயே செயல்படுத்தப்படுமா என்பது தொழில்துறை வட்டாரங்களில் முக்கிய கவனப்பொருளாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!! தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தனியார் நிறுவனங்களுக்கு ஏவுகணை தயாரிக்க அனுமதி! அதானி, டாடா, மஹிந்திரா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

    தனியார் நிறுவனங்களுக்கு ஏவுகணை தயாரிக்க அனுமதி! அதானி, டாடா, மஹிந்திரா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

    இந்தியா
    பார்லி., மழைக்காலத் தொடர்! ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்... மத்திய அரசு அழைப்பு!

    பார்லி., மழைக்காலத் தொடர்! ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்... மத்திய அரசு அழைப்பு!

    இந்தியா
    நாளை சொந்த தொகுதி செல்கிறார் முதல்வர் விஜய்!! ‘மக்கள் சேவை தளம்’ செயலி அறிமுகம்! 3 நாளில் தீர்வு உறுதி!

    நாளை சொந்த தொகுதி செல்கிறார் முதல்வர் விஜய்!! ‘மக்கள் சேவை தளம்’ செயலி அறிமுகம்! 3 நாளில் தீர்வு உறுதி!

    அரசியல்
    5 நிமிடத்தில் கொத்து பரோட்டா ஆக்கிட்டேன்! முதல்வர் விஜயை மீண்டும் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்! புதிய சர்ச்சை!

    5 நிமிடத்தில் கொத்து பரோட்டா ஆக்கிட்டேன்! முதல்வர் விஜயை மீண்டும் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்! புதிய சர்ச்சை!

    அரசியல்
    7 பெண்கள், 6 குழந்தைகள் மீட்பு!! 371 புகார்களுக்கு உடனடி தீர்வு! மாஸ் காட்டும் சிங்கப்பெண் அதிரடிப்படை!

    7 பெண்கள், 6 குழந்தைகள் மீட்பு!! 371 புகார்களுக்கு உடனடி தீர்வு! மாஸ் காட்டும் சிங்கப்பெண் அதிரடிப்படை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share