தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு ஆஜராக முன்னால் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தமிழக வெற்றி கழகத்தில் இணையச் சொல்லி மிரட்டியதாக அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு ஆஜர் பரபரப்பு
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக கடந்த ஜூலை மூன்றாம் தேதி முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர் பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆஜர் படுத்தி திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் இதைத் தொடர்ந்து நீதிபதி சிதம்பரம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சொந்த ஜாமினில் விடுவித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் பத்து நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்
இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி விசாரணை முடிந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடக்கும் போது தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைய சொல்லி மிரட்டியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்
இதையும் படிங்க: நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இது தொடர்பாக csr மனு ரசீது வழங்கப்பட்டு இன்று பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது
இதைத்தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார் அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு ஏ டி எஸ் பி மற்றும் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை... நள்ளிரவில் மாஜிஸ்திரேட் பிறப்பித்த அதிரடி உத்தரவு... நடந்தது என்ன?