கரூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல்முறையாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்திற்குப் பிறகு, முதல்வராக அவர் கரூருக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது. இந்த நிகழ்ச்சி உணர்ச்சிபூர்வமாகவும், அரசியல் முக்கியத்துவம் மிக்கதாகவும் அமைந்தது.
சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்வர் விஜய் கரூர் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

திமுகவை கடுமையாக விமர்சித்த முதல்வர், கரூர் சம்பவத்தை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். “பழியை போட்டுவிட்டு அரசியல் ஆதாயமும் தேடினார்கள். சட்டப்பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின் பழியை என் மீது திருப்பினார்” என்று கூறினார். மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே அரசியலுக்கு வந்ததாகவும், “பணமா? ஜனமா?” என்றால் எப்போதும் ஜனத்துடன் நிற்பேன் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 285 நாள் சைலண்ட்..! இடைத்தேர்தல் ஸ்டண்ட்... இந்த விளம்பரம் தேவையா.? CM விஜயை சாடிய திமுக..!
தவெக ஆட்சியில் ஊழல், லஞ்சம் இல்லை என்றும், அரசு அலுவலகங்கள் மக்களுக்கு மரியாதை கொடுக்கின்றன என்றும் பெருமிதம் தெரிவித்தார். ஊரை அடித்து உலையில் போட்டதாக திமுகவை விமர்சித்தார். இன்னும் எத்தனை பேர் சிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.
இதையும் படிங்க: “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல... இவங்க கூட செம்ம கூத்தா இருக்கு...” - திமுகவை பங்கமாய் கலாய்த்த விஜய்...!