தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்திக்க வந்த முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மயக்கம் வருகிறது ஆஸ்பத்திரிக்கு செல்கிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறிச் சென்றதால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கடந்த 18ஆம் தேதி இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசும்போது தமிழக முதல்வர் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பும் வகையிலும் மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசி இருந்தார் இது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயன் இல்லத்தில் வைத்து அவரை கைது செய்தனர்
மார்க்கண்டேயனை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அவரை விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அழைத்து வந்தனர் தற்போது வரை சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட குற்றப்பிரிவு ஏ டி எஸ் பி ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: "அராஜகம்"..! மக்கள் பாடம் புகட்டுவாங்க..! மார்க்கண்டேயன் கைது... அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்.!!
இந்த நிலையில் மார்க்கண்டேயனை சந்திக்க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதாஜீவன் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி வகாப் உள்ளிட்டோர் வருகை தந்தனர் அவர்களை பார்ப்பதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டனர் காவல்துறையினர் அவர்களுக்கு அனுமதி மறுத்ததை தொடர்ந்து காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது
அப்போது வெயிலும் அதிகமாக அடித்ததை தொடர்ந்து திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காரில் ஏறி அமர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்ற போது எனக்கு மயக்கம் வருகிறது ஆஸ்பத்திரிக்கு போறேன் ஐயா ஆஸ்பத்திரிக்கு போறீங்க மயக்கம் வருகிறது என்று கூறியபடி அங்கிருந்து சென்றார் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 6 மாதத்தில் ஆட்சி மாற்றம்... திமுகவுக்கு தாவும் தவெக எம்.எல்.ஏ.க்கள்... பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்...!