தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர். அவர்கள் இருவரிடமும் தான் பேசியிருப்பதாகவும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் வைத்திருப்பதாகவும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு மக்களுக்கு நல்ல வித்தியாசமான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என டிடிவி தினகரனிடம் வேண்டுகோள் வைத்துள்ளேன். அதேபோல் மற்ற தலைவர்களும் வைத்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் மிகப் பெரிய மனிதர்கள். இருவரிடத்திலும் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் வைத்துள்ளேன் எனக்கூறினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு... இபிஎஸுக்கு எதிராக மாஸ்டர் பிளான்...!
செங்கோட்டையன் நாளை செய்தியாளர்களைச் சந்தித்த பின் அது தொடர்பாக என்னிடம் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன். முத்துசாமி இங்கிருந்துதான் திமுகவுக்கு சென்றார். எனவே இந்த வயதில் முத்துசாமி ஆள்பிடிக்கும் வேலையை விட்டுவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மறுபடியும் இபிஎஸ் பக்கம் போனா சோலி முடிஞ்சிடும்! நல்ல முடிவெடுங்க... செங்கோட்டையனுக்கு புகழேந்தி வேண்டுகோள்