நாளை மனம் திறந்து பேச போவதாகவும், மனதில் உள்ள கருத்துகளை பிரதிபலிக்க போவதாகவும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்த பிறகு, அவரை சமாதானம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அவற்றை செங்கோட்டையன் ஏற்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்காக ஈரோட்டில் இருந்து முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் இரவு குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு வருகை தந்தார்.
அப்போது சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய கே.வி.ராமலிங்கம் அங்கிருந்து திரும்பி சென்றார். கே.வி.ராமலிங்கம் பேசிய போதும், சசிகலா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒன்று சேர்த்து தேர்தலை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்... " - பாடல் வரிகளால் பதிலளித்த செங்கோட்டையன்... எதற்கு தெரியுமா?
அதே நேரத்தில் சந்திப்பு குறித்து கேட்ட போது பதில் கூறாமலேயே கே.வி.ராமலிங்கம் சென்றார்
இதையும் படிங்க: மறுபடியும் இபிஎஸ் பக்கம் போனா சோலி முடிஞ்சிடும்! நல்ல முடிவெடுங்க... செங்கோட்டையனுக்கு புகழேந்தி வேண்டுகோள்