• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை டெல்லியில் சந்தித்து பேசியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
    Author By Amaravathi Tue, 02 Jun 2026 14:31:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai give a letter to BJP

    பாஜக தேசிய தலைவரிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரபரப்பான கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கட்சி தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை டெல்லியில் சந்தித்து பேசியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த சந்திப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அண்ணாமலை சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் தேசிய தலைவருடன் என்ன பேசினார் என்பது தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பட்டியலிட்டு, தனது கருத்துகளை கடிதமாக நிதின் நபினிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    நிதின் நபினை மட்டுமின்றி, பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷையும் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். அரசியல் ரீதியாக பி.எல். சந்தோஷ் தான் அண்ணாமலையின் வழிகாட்டியாக கருதப்படுவதால், அவரிடமும் தனது மனக்குமுறல்களை அண்ணாமலை பகிர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Annamalai

    இதையும் படிங்க: BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?

    தேசிய தலைவருடன் நடைபெற்ற சந்திப்பில், ‘தான் பாஜகவிலிருந்து விலக விரும்புகிறேன். ஆனால் அது எந்தவிதமான மனக்கசப்பும் இல்லாமல், சுமூகமான முறையில் இருக்க வேண்டும்’ என்ற தனது எண்ணத்தை அண்ணாமலை தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதற்கான காரணமாக, கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த தனது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, நாயினார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டபோது, அண்ணாமலையின் திறமையை பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதன்பிறகு கிட்டத்தட்ட ஓராண்டு கடந்தும் மாநில அல்லது தேசிய அளவில் எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    மேலும், சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தாம் முன்வைத்த பல ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் போதிய முக்கியத்துவம் பெறவில்லை என்றும், அவை பரிசீலிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதன் காரணமாக, கட்சியிலிருந்து விலகுவது குறித்து சிந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தேசிய தலைவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அண்ணாமலை தற்போது எந்தவொரு கட்சிப் பதவியிலும் இல்லாததால், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சாதாரண கட்சித் தொண்டராகவே உள்ளார். இந்த நிலையில், கட்சியிலிருந்து விலக விரும்புவதாக தனது எண்ணத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார் என்றும், அதிகாரப்பூர்வமாக விலகல் கடிதம் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Annamalai

    இதற்கு பதிலளித்த நிதின் நபின், ‘இந்த விவகாரம் குறித்து மேலும் பேசலாம். நீங்கள் கட்சியில் தொடர்ந்தால் தேசிய அளவில் உங்களுக்கு பொருத்தமான பொறுப்பு வழங்கப்படும்’ என கூறி அண்ணாமலையை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் குறித்து அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியிடமும் விவாதிக்கப்படும் என்றும், பின்னர் கட்சித் தலைமையிலிருந்து அவரை மீண்டும் தொடர்புகொள்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சந்திப்பு முடிந்த பிறகு அண்ணாமலை டெல்லி விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அவர் அமித்ஷாவையும் சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இறுதியில் நிதின் நபினை மட்டும் சந்தித்துவிட்டு தனது பயணத்தை முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

    செய்தியாளர்களை சந்திப்பது குறித்து கேட்டபோது, ‘டெல்லியில் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. சென்னை திரும்பிய பிறகு உரிய நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பேன்’ என்று அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால், அண்ணாமலை சென்னை திரும்பிய பிறகு அவர் அளிக்கக்கூடிய விளக்கம் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    மேலும் படிங்க
    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?" எடப்பாடியை வெளுத்துவிட்ட தவெக..!

    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?" எடப்பாடியை வெளுத்துவிட்ட தவெக..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜூன் 5 வரை கொட்டப்போகும் கனமழை! ஆரஞ்ச், எல்லோ அலர்ட்டால் திணறும் கேரளா!

    ஜூன் 5 வரை கொட்டப்போகும் கனமழை! ஆரஞ்ச், எல்லோ அலர்ட்டால் திணறும் கேரளா!

    இந்தியா
    பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!

    பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!

    அரசியல்

    'மஞ்சணத்தி' படம் எழுதியதே இளையராஜாவை நினைத்து தான்..!! அவருடன் இணைந்திருப்பது மறக்கமுடியாத தருணம் - மாரி செல்வராஜ் வாழ்த்து..!

    சினிமா
    "பல தலைமுறைக்கு வழிகாட்டும் இசை"..! முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய இளையராஜா..!!

    "பல தலைமுறைக்கு வழிகாட்டும் இசை"..! முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய இளையராஜா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?

    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?" எடப்பாடியை வெளுத்துவிட்ட தவெக..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜூன் 5 வரை கொட்டப்போகும் கனமழை! ஆரஞ்ச், எல்லோ அலர்ட்டால் திணறும் கேரளா!

    ஜூன் 5 வரை கொட்டப்போகும் கனமழை! ஆரஞ்ச், எல்லோ அலர்ட்டால் திணறும் கேரளா!

    இந்தியா
    பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!

    பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!

    அரசியல்

    "பல தலைமுறைக்கு வழிகாட்டும் இசை"..! முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய இளையராஜா..!!

    தமிழ்நாடு
    எங்கள் மண்ணை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்! பிரதமர் மோடியிடம் மியான்மர் அதிபர் உறுதி!

    எங்கள் மண்ணை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்! பிரதமர் மோடியிடம் மியான்மர் அதிபர் உறுதி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share