முன்னதாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் அமமுகவின் டிடிவி தினகரன், தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே. நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஊட்டியில் வெயில் குறைவு என்பதால், முதலமைச்சருக்கு சிறிய குழப்பம் இருந்திருக்கலாம்.
இதையும் படிங்க: பாஜக ஸ்ட்ராங்கா இருக்கு; INDIA கூட்டணி பலவீனமா இருக்கு.. ப.சிதம்பரம் பகீர் கருத்து!!

சென்னைக்கு வந்தபின் 2026ல் திமுக தோல்வியடைந்துவிடும் என்பது தெளிவாக புரிந்துவிடும். ஓபிஎஸ் ஐயாவின் கருத்துகளுக்கு எங்களின் தலைவர்கள் பதில் சொல்லிவிடுவார்கள். எல்லோரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். யாரும் பிரிந்து செல்லவில்லை. பாஜக கூட்டணி வலுவாகவே இருக்கிறது. திமுகவில் இருப்பவர்கள் எங்கள் கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்கிறார்கள்.

நான் ஒரு தொண்டனாக பணியை செய்து கொண்டிருக்கிறேன். கூட்டணி தொடர்பாக விவகாரங்களில் ஒதுங்கி இருக்கிறேன். ஓபிஎஸ் அண்ணன் எப்போதும் எங்களுடன் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் ஓபிஎஸ் அண்ணனுக்கு சிறப்பான இடம் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க முடியுமா.? பாயிண்டைப் பிடித்த பாஜக!!