தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன் என்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவிக்காதது ஏன் என்று நேரடியாகக் கேள்வியெழுப்பியதுடன், அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியலில் மௌனம் கூடாது: "அரசியலில் கம்முனு இருக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவிக்காதது ஏன்? பேசவேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய்.
இதையும் படிங்க: படித்தும் பயனில்லை! “தீபத்தூணுக்கும் எல்லைக்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்!” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
"எவ்வளவு பிரச்சினைகள் நடக்குது... எவ்வளவு சண்டைகள் நடக்குது... நான் பேசவே மாட்டேன்... வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால், உங்களை நம்பி எப்படி மக்கள் ஆட்சிப் பொறுப்பைக் கொடுப்பார்கள்?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
தப்பான விஷயமா? தப்பு என்று சொல்லுங்கள். சரியான விஷயமா? சரி என்று சொல்லுங்கள். விஜய் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புதுவையில் ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார். அவர் சிறுபான்மையினர் என்பதால் பொறுப்பு கொடுக்கவில்லை என்று பேசிய விஜய், திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மையினருக்காக ஏன் பேசவில்லை?" என்று அண்ணாமலை விஜய்யின் செயல்பாட்டில் உள்ளதாகக் கருதும் இரட்டை நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டினார். புதுவை மக்களும் விஜய்யைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். புதுவை மக்களுக்கும் உண்மை தெரியும்.
"தேர்தல் களத்தில் மோதுவோம். ஆனால், நியாயமான விஷயத்தில் ஒன்றாக இருப்போம் என்பதுதான் விஜய் அவர்களுக்கு நான் சொல்லும் தாழ்மையான கருத்து" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2026 சட்டசபைத் தேர்தல்: அடுத்த மாதம் ராகுல் காந்தி தமிழகம் வருகை! கிராம கமிட்டி மாநாட்டில் பங்கேற்பு!