வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைத்து, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வியூகத்தைத் தமிழகத்தில் உச்சகட்ட வேகத்தில் முன்னெடுத்துச் செல்கிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் (ஜனவரி 2026) தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி மாநில மாநாட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தக் கிராமக் கமிட்டி மாநாட்டுப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்காக, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் 6 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை அமைத்து, களப் பணிகளை மும்முரமாகத் தொடங்கியுள்ளது. ராகுல் காந்தியின் இந்தப் பயணம், கட்சித் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தையும் தேர்தல் அனலையும் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மற்றொரு நட்சத்திரப் பேச்சாளரான பிரியங்கா காந்தி பங்கேற்கும் மாபெரும் மகளிர் பேரணி ஒன்றையும் தமிழகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் இந்தப் பயணங்கள், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயல்பாடுகளுக்கு ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதினை சந்திக்க அனுமதி மறுப்பு.. ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!
இதையும் படிங்க: இரவே குவிந்த புதுவை வாரியர்ஸ்! தொண்டர்களுக்கு N. ஆனந்த் வேண்டுகோள்! நிர்வாகிகள் உற்சாகம்!