முன்னாள் முதல்வட் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் ராமநாதபுரம் பசும்பொன் தேவர் குருபூஜையில் சந்தித்து ஒருங்கிணைந்ததற்கு தான் காரணமில்லை என பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். "நான் வாய் திறந்தால் எல்லாவற்றையும் பேசி விடுவேன்" என எச்சரித்த அவர், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க ஸ்டாலின் பிரிவினை அரசியலை தூண்டுவதாக விமர்சித்தார். 
DMKவின் வாக்காளர் பட்டியல் திருத்த எதிர்ப்பை "முறைகேடுகளை மறைக்கும் முயற்சி" என விமர்சித்த அண்ணாமலை, அரசியலில் தனது பொறுமைக்கும் எல்லை உண்டு என எச்சரித்தார். இந்த அறிக்கை, அதிமுக உள் பிளவு, திமுக ஊழல் புகார்கள், 2026 தேர்தல் உத்திகள் போன்றவற்றை மீண்டும் சூடாக்கியுள்ளது.
அண்ணாமலை, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசினார். "ராமநாதபுரம் பசும்பொன்னில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இவர்கள் மூவரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை" என தெளிவுபடுத்தினார். 
இதையும் படிங்க: திமுகவின் ரூ.888 கோடி ஊழல் எப்படி நடந்தது?! திடுக்கிட வைக்கும் ED ரிப்போர்ட்! இதுவரை வெளியே வராத ரகசியம்!
"என்னால் வாய் திறந்தால் எல்லாவற்றையும் பேசி விடுவேன். வாக்கு கொடுத்துவிட்டேன், லட்சுமண ரேகையை தாண்ட மாட்டேன்" என அமித் ஷாவுக்கு கொடுத்த வாக்கு அப்படி. "ஆனால், என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" என எச்சரித்தார். "அதிமுகவில் சிலர் என்னைத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்" என சிரித்துக்கொண்டே கூறினார்.
அண்ணாமலை, திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் எடுத்துச் சொன்னார். "தமிழக அரசு உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஊழல்கள் செய்திருப்பதாகவும், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மீதும் ஊழல் புகார்கள் வந்துள்ளது.
 திமுக அரசின் இந்த ஊழல் புகார்களை மறைக்கும் விதமாக, பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் தமிழர்கள் குறித்து பேசியதாக பொய்யான தகவல்களை முதல்வர் கூறி வருகிறார்" என விமர்சித்தார். கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் பீகார் மக்களை கொச்சையாகப் பேசிய வீடியோக்களை குறிப்பிட்டு, "திமுக கட்சியினர் தான் பீகார் மக்களை விமர்சித்து பேசியதாக பிரதமர் கூறினார்" என தெளிவுபடுத்தினார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்தும் அண்ணாமலை பேசினார். "தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திமுக எதிர்த்து வருகிறது. இது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான். திமுக பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும் முறைகேடுகளும் செய்துள்ளது. அவை அனைத்தும் இந்த நடவடிக்கையின் மூலம் சீர் செய்யப்படும். 
அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என யாரும் கூற முடியாது. யாருடைய வாக்குரிமையும் பறிக்கப்படவில்லை. அனைவரது வாக்குரிமையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என விளக்கினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு அதிமுக உள் பிளவு மற்றும் திமுக ஊழல் புகார்களை மீண்டும் சூடாக்கியுள்ளது. அக்டோபர் 30 அன்று ராமநாதபுரம் பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜையில் OPS, தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
அவர்கள் ஒருங்கிணைந்ததற்கு அண்ணாமலை காரணம் என்று சிலர் கூறியதை அவர் மறுத்துள்ளார். "அதிமுகவில் சிலர் என்னைத் திட்டுகின்றனர்" என சிரித்துக்கொண்டே கூறிய அண்ணாமலை, தனது பொறுமைக்கு எல்லை உண்டு என எச்சரித்தது கவனம் கவர்ந்தது.
இதையும் படிங்க: அமைச்சர் நேரு வீட்டில் அள்ளியது என்னென்ன?! புட்டு புட்டு வைத்த ED! முழு தகவல் அறிக்கை!!