பிகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டப் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (நவம்பர் 6) நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மற்றும் இந்தியா கூட்டணி (மகாகத்பந்தன்) இடையேயான இருமுனைப் போட்டி தீவிரமடைந்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) - பாஜக தலைமையிலான என்டிஏவும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) - காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் இத்தேர்தலில் மோதுகின்றன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும், அசாதுதின் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் தனித்து போட்டியிடுகின்றன. இரு கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சலசலப்புகள் இறுதியில் சமரசத்தால் தீர்ந்தன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரசாரங்கள் தீவிரமடைந்தன.
கடந்த சில நாட்களாக, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஜேபி தேசியத் தலைவர் ஜேபி நட்டா, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பிகாரில் பிரசாரம் செய்து வந்தனர். 
இதையும் படிங்க: பீகார்ல பேசுனதை தமிழ்நாட்டுல பேசுவீங்களா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி!

இன்று இறுதிக் கட்டப் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மோடி பெண் தொண்டர்களுடன் சந்திப்பு நடத்துகிறார், ராகுல் காந்தி மூன்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார், தேஜஸ்வி 17 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
இதனிடையே, இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. வாக்கு இயந்திரங்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. 7.42 கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் இத்தேர்தல், நவம்பர் 11 அன்று இரண்டாவது கட்டமாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடக்கிறது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத்தின் காலாவதி நவம்பர் 22 அன்று நிகழ உள்ளது. வேலையின்மை, குடும்பங்கள் இடம்பெயர்வு, சாதி அரசியல் உள்ளிட்ட சமூக-பொருளாதார பிரச்சினைகள் தேர்தல் விமர்சனங்களின் மையமாக உள்ளன. என்டிஏ 'மெரா பூத் சப்சே மஜ்பூத்' திட்டத்தை வலியுறுத்துகிறது, இந்தியா கூட்டணி வேலைவாய்ப்பு உறுதி அளிக்கிறது. பிகார் வாக்காளர்கள் தீவிர எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க!! குடும்பத்துக்காக இல்ல! மக்களுக்காக உழைச்சேன்!! நிதிஷ் கெஞ்சல்!