கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வியாளர்கள் தொழில் அதிபர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோவையில் ஆலோசனை மேற்கொண்டார். கோவை நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த ஆலோசனையில், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதற்கு முன்னதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். காங்கிரஸ் தமிழகத்தில் இருப்பதாக தெரியவில்லை. கர்ம வீரர் காமராஜர் தொடர்பான திமுக எம்.பி திருச்சி சிவா சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் இல்லை. திமுக காங்கிரஸை பின்னால் இருந்து இயக்குகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, காமராஜர் குறித்த பேச்சை
விசிக பெரிது படுத்த வேண்டாம் என சொல்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் அது குறித்து பேசவில்லை. அந்த அளவு காங்கிரஸ் செயலிழந்து உள்ளது. 5 முறை ஆட்சியில் இருந்த கட்சி ஓரணியில் தமிழ்நாடு முகாமில் இணைந்தால் மட்டுமே 1000 உரிமைத் தொகை என பகிரங்கமாக தெரிவித்து வலுக்கட்டாயமாக மக்களை கட்சியில் சேர்த்து வருகின்றனர். இப்படி தான் பண பட்டுவாடா செய்வோம் என பல்லடத்தில் திமுகவினர் தெரிவிக்கின்றனர். கூவிக்கூவி மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களை சேர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சீருடையுடன் நடந்து சென்ற மயிலாடுதுறை டி.எஸ்.பி..! கொந்தளித்த அண்ணாமலை.. விளக்கமளித்த காவல்துறை..!
திருப்பூர் கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. சட்டம் ஒழுங்கை மையப்படுத்தும் தேர்தலாக இருக்கும் . மின்கட்டண உயர்வு காரணமாக சிறுகுறு தொழில்கள் பாதிப்படைகிறது. திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 7 நாட்கள் ஆன நிலையிலும் முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. விசாரணையும் செய்யவில்லை. சாரி என்ற வார்த்தையை சொல்லிவிட்டு போய்விடுவார் என்றார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களை ஓட ஓட வெட்ட துரத்தும் போதை ஆசாமிகள்... அண்ணாமலை அதிருப்தி..!