புதிய எம்.ஜி.ஆராக இருக்கும் பவன் கல்யாண் இன்றைக்கு நம்முடன் பவனி வந்திருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “தமிழுக்கும் தெலுங்குக்கும் நிறைய தொடர்பு உண்டு. பாரதியார் தமிழை புகழ்ந்து பேசியதைப் போலவே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்றும் சொல்லியிருக்கிறார். ஆந்திராவும் தமிழ்நாடும் ஒரே கலாச்சாரம், பண்பாட்டை கொண்டது. அந்நியர்களை எதிர்த்து போராடுவதில் இரு மாநிலங்களும் ஒன்றாக சேர்ந்தே போராடி இருப்பது இன்னோர் ஒற்றுமை.

ஆந்திரத்தில் என்.டி.ஆர் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். இருவருக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. அதே போல் புதிய எம்.ஜி.ஆராக இருக்கும் பவன் கல்யாண் இன்றைக்கு நம்முடன் பவனி வந்திருக்கிறார். அவருடைய வரவு நல் வரவாக அமையட்டும். அவர் வந்திருப்பதை தேச ஒற்றுமையாக நினைக்கிறேன். ஒரே நாடு ஒரே தேசம் 1960 வரையில் ஒரே தேர்தலாகத்தான் இருந்தது. கடந்த 2024 மக்களவை தேர்தலுக்காக ரூ. 1 லட்சம் கோடி செலவு செய்திருக்கிறோம். ஒரே தேர்தலாக நடந்தால் நிச்சயம் அதில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.
இதையும் படிங்க: இதுல மோடி ஆட்சியை விட மன்மோகன் சிங் ஆட்சிதான் பெஸ்ட்.. தரவுகளுடன் துள்ளிக் குதிக்கும் ப. சிதம்பரம்!!

எனவே ஒரே நாடு ஒரே தேர்தலால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. நேரம் மிச்சமாகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒற்றை கட்சியின் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்கிறார். ஆனால், அவருடைய தந்தை ஆதரித்திருக்கிறார்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஓரிடம்..? அதிமுக வழங்குமா.? நயினார் சொல்வது என்ன?