கோவையில் சித்தாபுதூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் . நவீன அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அவர் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களை 3,5,8 வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெறாத பட்சத்தில் அவர்களை பெயிலாக்கும் நடைமுறை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தமிழக அரசு நடத்தக் கூடிய பள்ளிகளின் கணிதம் மற்றும் மொழிப் பாடம் தேவை, அவர்களுக்கு மொழிகளை கற்றுக் கொள்வதிலேயும் கணித மற்றும் அறிவியல் மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆனால் சர்வதேச அளவும் சரி இந்திய அளவிலும் சரி பல்வேறு ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால், குழந்தைகள் 8, 9 வகுப்புகளை தாண்டி செல்கிறார்கள், ஆனால் அவர்களால் ஒரு பக்கத்தை கூட முழுமையாக படிக்க முடிவதில்லை என்று கூறுகிறார்கள்.

ஒரு பெரிய அளவிலான கணக்கை கூட அவர்களால் போட முடியவில்லை என ஆய்வு அறிக்கை சொல்கிறது. நாம் கல்விக் கூடங்களை நடத்துகிறோம், கல்வி திட்டங்களை கொடுக்கிறோம். ஆனால் எந்த அளவுக்கு குவாலிட்டியான ஒரு விஷயத்தை கொடுக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கையில் பத்து பன்னிரண்டு பொதுத் தேர்வில் நடத்த தேவையில்லை, எல்லோரையும் பாஸ் பண்ணி விட்டு செல்லலாமே ? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவருடைய, ஒட்டுமொத்த தேர்வுகளை வேண்டாம் என சொல்லுகிறாரா? போட்டி தேர்வுகளுக்கெல்லாம் என்ன அளவுகோல் வைப்பது ? தேர்வு எல்லாம் எப்படி போட்டி போட்டு தமிழ்நாடு முன்னேறுவது ?... போட்டி தேர்வுகளுக்கு எல்லாம் எப்படி அளவுகோல் வைத்து தேர்ந்தெடுக்க முடியும் ?..என கேள்வி அனுப்பினா. குழந்தைகள் இடை நிற்றலை தவிர்ப்பதற்காக, படிக்கிறார்களோ ? படிக்கவில்லையோ ? அனைவரையும் பாஸ் செய்து விடுகிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்.

இப்பொழுதெல்லாம் இன்ஜினியரிங் கிராஜுவேட் அதிகமாக வேலை கேட்டு வருகிறார்கள். என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வேலை கேட்டு வரக் கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் இன்ஜினியரிங் முடித்தவர்கள் தான். கடன் உதவி வாங்கி நான்கு வருடம் படித்து என்ஜினியர் ஆகிவிடுகிறார்கள். ஆனால் இது போன்ற விஷயங்களை ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும் அதுதான் சமூகத்திற்கு நல்லது என கூறினார். எல்லாரும் தனியார் பள்ளியை தேடும் பொழுது, அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. அரசு பள்ளிக் கூடங்களில் மாணவர்களின் அறிவை வளர்க்கக் கூடிய வகையில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில யாருக்கும் பாதுகாப்பு இல்ல..! சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு.. நயினார் கடும் தாக்கு..!
வட மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாடு சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளதாக தாங்கள் ஒருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள் என வானவில் சீனிவாசனிடம் பத்திரிக்கையாக எழுப்பி கேள்விக்கு பதில் அளித்த எம் எல் ஏ வானதி சீனிவாசன், தமிழ்நாட்டை ஒப்பிடும் போது வடமாநிலங்கள் 40 வருடங்கள் பின் தங்கியவை. அதனால் அவர்களுடன் எப்பொழுதும் நாம் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டின் இலக்கை உயரமாக வைத்து அதை நோக்கி நகர வேண்டும் என தமிழ்நாடு வடமாநிலங்களை விட முன்னோடி மாநிலம் என ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: கமலுக்கு எம்.பி. பதவி.. வைகோவுக்கு உண்டா.? கிடைக்காவிட்டால் மதிமுக என்ன செய்யும்.. வைகோ அதிரடி!