தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சமர்ப்பித்தார். அதையொட்டி இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் விவசாயிகளுடன் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அவர்களின் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில், பயிர்க்கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, நீர்ப்பாசன வசதி மேம்பாடு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்தக் கருத்துகளை ஒருங்கிணைத்து பட்ஜெட்டைத் தயாரிப்பதில் முதலமைச்சரின் வழிகாட்டுதல் முக்கியப் பங்காற்றியது. இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு நன்மை செய்ய அடுத்த ஜென்மம் எதற்கு என்றும் இந்த ஜென்மத்திலேயே நல்லது செய்யலாமே என்று முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: AI முதல் வேளாண்மை வரை... பட்ஜெட்டில் என்னென்ன? அமைச்சர் வினோத் உரை..!!
வேளாண் துறை சார்ந்த தொழிற்சாலைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம், ஆனால் அதுவும் இல்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கள் இறக்க அனுமதி தர விவசாயிகள் பல நாட்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றும் ஆரோக்கியமான கள்ளை இறக்குமதி செய்ய அனுமதிக்கலாம் எனவும் பிரேமலதா அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: "வெற்றி" இல்ல "வெற்று" அறிக்கை..! ஏமாத்திட்டீங்க CM..! முதல்வர் விஜயை பந்தாடிய சீமான்.!