தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் மலேசியா பாண்டிக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். அப்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, “குடும்ப அரசியல் வீழ்ச்சியடைய 2026 தேர்தல் முடிவு மிக முக்கியம்” என்று வலியுறுத்தினார்.
அண்ணாமலை பேசுகையில், “திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒவ்வொரு துறையிலும் ரொட்டேஷன் அமைச்சராக மாற்றப்பட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரை ஓட்டு கேட்க வர வேண்டாம் என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது” என்றார்.
மேலும், “திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. 2,080 கற்பழிப்பு வழக்குகள், 8,008 படுகொலைகள், 39,900 குழந்தைகள் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
இதையும் படிங்க: சமூக நீதி பற்றி பேசு திமுக வெட்கப்படணும்! மாணவர்கள் அவல நிலை! அண்ணாமலை விமர்சனம்!
பிரேமலதா கூட மேடையில் முதல்வரை வைத்துக்கொண்டு போதை கலாச்சாரம் பற்றி பேசியுள்ளார். ஆனால் திமுக 5 ஆண்டுகளில் செய்ததையும், அடுத்த 5 ஆண்டுகளில் செய்யப் போவதையும் சொல்லாமல் தப்பித்துக் கொள்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், 8,000 டோக்கன் பிரச்சினையில் தேர்தல் ஆணையம் தலையிட்டுள்ளதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார். “மே 4-ம் தேதிக்குப் பிறகு இபிஎஸ் ஆட்சி அமையும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி செய்த பணிகளை பட்டியலிட்ட அண்ணாமலை, “மருத்துவக் கல்லூரி, ராமேஸ்வரம் ரயில்வே நிலையம், 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான 4 வழிச்சாலை, ஜல்ஜீவன் திட்டம் மூலம் 3,900 கோடி ரூபாய் செலவில் குடிநீர் வசதி உள்ளிட்ட பல திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் இந்த மாவட்டத்தில் இன்னும் 47% மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் 99% நிறைவடைந்துள்ளது” என்றார்.
இறுதியாக, “கடந்த வாரம் தலைமைச் செயலாளர் மாற்றம், இரண்டு நாட்களுக்கு முன் டிஜிபி மாற்றம்... 23-ம் தேதி முதல்வரை மாற்ற வேண்டும். குடும்ப அரசியல் வீழ்ச்சியடைய இந்தத் தேர்தல் முடிவு மிக முக்கியம்” என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இது ரொம்ப பெரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!! அவினாசி மக்களுக்கு அண்ணாமலை வாக்குறுதி!!