அமலாக்கத்துறை சோதனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் முக்கியமான அட்வைஸ் கொடுத்திருக்காராம்.
தேர்தல் நெருங்குறதுனால திமுக புள்ளிகள் மேல மத்திய அரசோட விசாரணை அமைப்புகளோட நடவடிக்கை கடுமையா இருக்கும்னு சொல்றாங்க. தமிழக உளவுத்துறையும் அடுத்து என்னென்ன நெருக்கடிகளை கொடுப்பாங்கன்னு முதல்வர் கிட்ட ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்காம். அதை வச்சுதான் முதல்வர் போன வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சில அட்வைஸ்களை கொடுத்தாராம். யாரும் ரைடுகளுக்கு பயப்பட வேணாம்.
இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான். போன நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும் ரைடு செஞ்சாங்க. ஆனா நாமதான் வெற்றி பெற்றோம். இப்பவும் அத அவங்க தொடர்வாங்க. சட்டப்பூர்வமா அந்த சோதனைகளை எதிர்கொள்ளணும். மக்கள் மத்தியில நம்ம அரசாங்கத்துக்கு பெருசா கெட்ட பெயர் இல்லை. அதிமுக பாஜக கூட்டணியை தமிழக மக்கள் ஏத்துக்க மாட்டாங்க.
இதையும் படிங்க: #BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்து ஆவணங்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி!
நாம் செஞ்ச வேலைகளை சொல்லி மக்கள் கிட்ட போங்கன்னு பல கோணத்தில பேசினாராம். அதுக்கு அடுத்த நாள்தான் அமைச்சர் ஐ பெரியசாம, அவரது மகன் மற்றும் மகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினார். ரைடு நடந்தப்பவே கனிமொழி, ஆர்.எஸ்.பாரதின்னு கண்டனம் தெரிவிச்சு கருத்து சொன்னாங்க. ஐ பெரியசாமியும் ரைடுக்கு அடுத்த நாளே தான் தொகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை கலந்துகிட்டு ரொம்ப சகஜமா இருந்தாரு. பாஜகவை கடுமையா தாக்கியும் பேசினாரு. இதற்கு முழு காரணம் முதலமைச்சர் கொடுத்த அட்வைஸும், தைரியமும் தான் காரணம் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கைதாகிறாரா அமைச்சர் ஐ.பெரியசாமி? - சிக்கியது முக்கிய ஆவணங்கள்?... 3 மணி நேரம் அதிரடி விசாரணை...!