திண்டுக்கலில் சோதனைக்கு உள்ளாகி இருக்கக்கூடிய ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தற்போது திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்திருக்கிறார். அந்த இல்லத்திற்கு இன்று அதிகாலை 6 மணி அளவில் சுமார் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் இல்லத்தில் இருந்து பணியாளான சுபாஷ் என்பவரை அமலாக்க துறையினர் வெறியேற்றிவிட்டு, அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை எதன் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்றால், 2006 ஆட்சி காலத்தின் போது ஜாபர் செட் என்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வீட்டு வசதி வாரியத்தில் ஒரு வீட்டை முறைகேடாக ஜாபர் சேட் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஒதுக்கியதாகவும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடத்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காலையிலேயே பரபரப்பு; அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...!
இது புனையப்பட்ட வழக்கு என ஜாபர் சேட் வழக்கு தொடர்ந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் தாமகவே முன்வந்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இந்த சோதனையானது நடப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அமைச்சர் ஐ.பெரியசாமி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு ஒன்றை அமலாக்கத்துறை விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அமலாக்கத்துறை ரெய்டுக்குள் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு, இரவாக கைது செய்யப்பட்டார். அதேபோல் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கைது செய்யப்படக்கூடுமா? என்ற அச்சம் திமுகவினரிடையே நிலவி வருகிறது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் பரபரப்பு... ஐ.பெரியசாமியின் மகன், மகள் வீடுகளையும் சுத்துப்போட்ட ED - காரணம் என்ன?