திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75வது பவள விழாவை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் கொண்டாடத் தயாராகியுள்ளது. இளைஞர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் ‘தி.மு.க. 75 அறிவுத் திருவிழா’ இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியுள்ளது. அறிவு மற்றும் சித்தாந்தப் பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்ட இந்தத் திருவிழா, தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு, நவம்பர் 16, 2025 வரை நடைபெற இருக்கிறது.
இன்று காலை 9:30 மணியளவில், திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விழாவை தொடங்கி வைத்தார். திராவிட இயக்கத்தின் கருத்தியலை வலியுறுத்தும் விதமாக, முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிடும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற புதிய நூலையும் வெளியிட்டார்.
இந்தத் தொடக்க விழாவில், தமிழ்நாட்டின் முற்போக்கு சிந்தனைகளைத் தூண்டும் வகையில், ‘சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி-2025’ மற்றும் கட்சியின் வரலாற்றை அலசும் ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ என்ற தலைப்பிலான இருநாள் கருத்தரங்கம் ஆகியவையும் ஆரம்பிக்கப்பட்டன.
இதையும் படிங்க: SIR விவகாரத்தில் இரட்டை வேடம்.... திமுக முகமூடியை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜூ...!
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றியதாவது: திராவிட முன்னேற்ற கழகத்தோட 75ஆம் ஆண்டு பயணத்தை நினைவு கூறக்கூடிய இந்த விழாவிற்கு அறிவு திருவிழான்னு உதயநிதி பேர் வைத்திருக்கிறார். இதைவிட பொருத்தமான தலைப்பு வேற இருக்க முடியாதுன்னு தான் சொல்லணும். கழகத்தை தொடங்கிய அறிஞர் அண்ணா, 50 ஆண்டு காலம் அதை கட்டி காத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் கழகத்தினுடைய முதல் தலைமையகம் பெயர் என்னன்னா அறிவகம். கருணாநிதி கட்டிய தற்போதைய தலைமையகத்தோட பேரு அறிவாலயம்.
இப்படி அறிவை மையப்படுத்தி அறியொளியை பரப்புவதே தலையாய கடமையாக நினைச்சு இங்கி வரக்கூடிய கட்சியோட 75ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை அறிவு திருவிழான்னு சொல்லாமல் வேற என்ன சொல்லி அழைக்க முடியும். உலக பொதுமறை வழங்கிய வள்ளுவருக்கான இந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் விரும்பிய அறிவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ள இளைஞரணியின் செயலாளர் கொள்கை இளவல் தம்பி உதயநிதி அவர்களையும் அவருக்கு துணைநிருக்கக்கூடிய இளைஞரணியினுடைய தம்பிமார்களையும் நெஞ்சார பாராட்டுகிறேன். தலைமை கழகத்தின் சார்பில் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
கடந்த ஒரு மாத காலமாக இந்த அறிவு திருவிழாவிற்கான பணிகளை தம்பி உதயநிதி அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு அந்த பணியை அவர் எந்த அளவிற்கு தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை முரசொலி செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. நானும் சரி அப்படி என்னதான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறார்கள் என பார்ப்போம் என காத்துக் கொண்டிருந்தேன். இந்த அறிவு திருவிழாவ பார்த்த பிறகு சொல்கிறேன். என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. வீண் போகவில்லை என்று சொல்வதை விட நான் நினைச்சதை விட சிறப்பாகவே ஏற்பாடு செய்துள்ளனர்.
வள்ளுவர் கோட்டத்தில் நின்று சொல்றேன் உதயநியோட கொள்கை பிடிப்புமிக்க செயல்பாடுகளை பார்க்கின்ற போது, அய்யன் வள்ளுவர் சொன்ன “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்” என்ற குரலுக்கேற்ப உதயநிதி செயல்படுகிறார் என்ற பெருமையோடு சொல்கிறேன்.
அந்த பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். இது என்னுடைய அன்பு கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவு திருவிழாவை இத்தோடு நிறுத்த மல் தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும் நிச்சயம் இளைஞர் சிறப்பாக நடத்தும் என்றநம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு எனக் கூறினார். முதலமைச்சர் மு.க . தன்னை மேடையில் புகழ்ந்து பேச பேச துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கியது காண்போர் மனதை உருக்கியது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் SIR பணிகள்... ஒரே இடத்தில் கூடிய தென் மாவட்ட ஆட்சியர்கள்... தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை...!