வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டிருக்கிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டிருக்கிறார். தொடர்ந்து அவர் இங்கிலாந்துக்கும் செல்ல உள்ளார்.
இதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலை உருவாக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்ட முதலீடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் இதுவரை நான்கு முறை பன்னாட்டு நிறுவனங்களுடைய மாநாடு நடைபெற்றது. சர்வதேச அளவில் அனைத்து முன்னணி தொழிற்சங்க நிறுவனங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
குறிப்பாக தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை அதிகரிக்கும் வகையிலும் அங்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் முதலமைச்சர் இன்று ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்கியுள்ளார். ஜெர்மன், இங்கிலாந்து என இரு நாடுகளுக்கும் செல்லும் முதலமைச்சர் அங்கு இருக்கக்கூடிய தொழில் முனைவோர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதையும் படிங்க: ரொம்ப பெருமை பீத்திக்காதீங்க ஸ்டாலின்.. பேட்ச்வொர்க் மாடல் அரசு என கிண்டலடித்த அண்ணாமலை..!!
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து என ரு நாடுகளுக்கும் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்காக தற்போது சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கட்சியினர், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரடியாக விமான நிலையம் வந்து வழி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தான் NO.1.. மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்..!!