தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு முலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் முதல்வர் உடன் செல்கின்றனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு முதலீட்டாளர்களை முதல்வர் நாளை (ஆக.31) சந்திக்கிறார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, செப்.1-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அவருடைய பயணங்களைப் போலவே இதுவும் இருக்கும் என்று நினைக்கிறார். ஆனால் நான் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதையும் படிங்க: வெளிநாடு பயணம் ஏன்? - பக்காவாக புள்ளி விவரங்களை சொல்லி வாயடைக்க வைத்த முதல்வர்...!
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ புதிய வாக்காளர்களை வந்துகொண்டிருக்கின்றனர். அதுதான் உண்மை. பிஹாரில் தேர்தல் ஆணையம் செய்ததைப் போல, தமிழ்நாட்டில் யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு. பிஹாரிலும் கூட மக்களை எழுச்சிப் பெற வைக்க தேர்தல் ஆணையம் உதவி செய்திருக்கிறது”என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய் குறித்த கேள்விக்கு, அது குறித்து கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதிகம் பேசமாட்டேன். இதுக்கெல்லாம் பேச அவசியமும் இல்லை. பேச்சை குறைத்து செயலில் எங்களுடைய திறனைக் காட்டுவேன் என்றார்.
இதையும் படிங்க: தொழில் முதலீடுகளை ஈர்க்க பயணம் - ஜெர்மனி, இங்கிலாந்து புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...!