உறுப்பினர்களை சேர்த்து முதல்வருக்கே ஷாக் கொடுத்துள்ளனர் மாவட்ட செயலாளர்கள். மாவட்ட செயலாளர்களின் தில்லுமுல்லுவை தரவுகளுடன் தோலூரித்து காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கையுடன் அவர்களை அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் நோக்கில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தொழில்நுட்ப ரீதியில் கட்சியில் உறுப்பினர்களை சேர்த்து வருகிறது திமுக. அதன்படி திமுக மாவட்ட செயலாளர்களுக்கு டார்கெட் பிக்ஸ் செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முதல்வரே இதனை நேரடியாக கண்காணித்து வருவதால் திமுக மாவட்ட செயலாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இவ்வளவு ஏன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே வீடு வீடாக சென்று மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கைகளை விளக்கியும் திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தும் உறுப்பினர் சேர்க்கை பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
செல்போன் ஓடிபி மூலம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கான செல்போன் வழிகாட்டு நெறிமுறை புத்தகம் போன்றவையும் வழங்கப்பட்டிருந்தன. இது தவிர அடிக்கடி வீடியோ காலில் தொடர்பு கொண்டும் உறுப்பினர் சேர்க்கை விவரங்கள் குறித்தும் முதல்வர் கேட்டறிவதால் மாவட்ட செயலாளர்கள் பயந்து போய் உள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் மூலம் திமுகவில் இரண்டு கோடி பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அன்பு முத்தங்கள்! பெற்றோரின் திருமண நாளில் உதயநிதி உருக்கம்..!
இந்த நிலையில் இது தொடர்பாக அண்மையில் காணொளி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியில் தில்லுமுல்லுவில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காய்ச்சி எடுத்து விட்டதாக தகவல் கசிந்திருக்கிறது. ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்து விட்டதாக கட்சி தலைமையிடம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில், அதை ஆய்வு செய்ததில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் போலியாக சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதாவது ஒரே செல்போன் எண் மூலமாக பலமுறை ஓடிபி பெறப்பட்டும், ஒருவர் இரு சிம் கார்டுகளை பயன்படுத்தினால் சிம் கார்டுக்கு ஒரு நபர் என முறைக்கேடு செய்திருப்பதாகவும் அதிர்ச்சிகர ரிப்போர்ட் திமுக தலைமைக்கு சென்றிருக்கிறது. இதனை தரவுகளுடன் கையில் வைத்து கொண்டு முதலமைச்சர் முத்துராமலிங்கத்தை கடுமையாக கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க சொன்னால் இப்படி அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு உறுப்பினர்களை சேர்க்கிறேன் என ஏமாற்றுவதா என முதலமைச்சர் எச்சரித்திருக்கிறார்.
இது தவிர மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முறையாக நடைபெறவில்லை என்ற தகவலையும் அறிந்து முதலமைச்சர் உச்சகட்ட கோபம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதேபோல தேனி வடக்கு மாவட்ட செயலாளரான கம்பம் ராமகிருஷ்ணன் ஒரே செல்போன் எண்ணை வைத்து ஒரு தெருவுக்கே உறுப்பினர் சேர்க்கை நடத்தி தலைமைக்கு விபூதி அடிக்க பார்த்ததாகவும், அவருக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பூஜை போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் ஆகியோரையும் சுணக்கமாக செயல்படுவதாக கூறி முதல்வர் கண்டித்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் யாராவது உறுப்பினர் சேர்க்கையில் அலட்சியம் காட்டினால் அவர்களது கட்சி பதவி உடனடியாக பறிக்கப்படும் என எச்சரித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனிவரும் காலங்களில் கவனத்துடனும் போர்கால அடிப்படையிலும் நிர்வாகிகள் செயலாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினின் திருமணநாள்.. மனைவி துர்காவுடன் சென்று அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை..!