பீகார் மாநிலத்தில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணயம் அறிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். நம்மிடம்உள்ள அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்து குரல் கொடுப்போம் என்றும் பீகார் அரசுக்கு அங்கு உள்ள எதிர்கட்சிகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என தெரிவித்திருப்பதுடன், நெருப்புடன் விளையாட வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் தேர்தல் ஆணயத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் சார் என்று அழைக்கப்பட்டும் “ஸ்பெஷல் இன்ட இன்டென்சிவ் ரிவிஷன்” என்று அழைக்கக்கூடிய சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரானவர்கள் என கருதப்பட்ட பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், ஜனநாயகத்தில் ஒரு தரப்புக்கு எதிரானவர்கள் அடுத்த தேர்தலில் நீக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக ஜனநாயகம் ஒருபோதும் தோற்கடிக்கப்படாது என்றும் தமிழகம் இதற்கான குரலை வலுவாக எழுப்பும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அநீதிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரே ஆயுதமாக திரண்டு நின்று சிறப்பு தீவிர சட்ட திருத்தத்தை வாபஸ் பெறும்வரை போராடுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். “குவைட் சார்” என்ற அளவில் அந்த போராட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் என்றும் இந்த சிறப்பு வாக்காளர் சட்ட திருத்தத்தின் மூலமாக தனக்கு எதிரான வாக்காளர்களை நீக்குவதற்கான செயல்களில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது என்றும், தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு தீவிர திருத்தம் தவறாக பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் முடிவுகளையே மாற்றுவதற்கான முயற்சி என்றும் அவர் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: குடும்பத்தை காப்பாத்த பிஜேபிக்கு அடிமை ஆயிட்டாரு! இபிஎஸ்ஐ வெளுத்து வாங்கிய டிகேஎஸ்
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனக்கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெருப்புடன் விளையாடக்கூடாது என்ற எச்சரிக்கையை பதிவு செய்திருக்கிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தவறான ஒரு முன்மாதிரியாக திகழும் என்றும், ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களும் இதில் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கிறது என்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் பெயர்களை எல்லாம் வாக்காளர் பட்டியலிருந்து நீக்க இந்த தீவிர திருத்த சட்டம் முயற்சிக்கிறது என்றும் தெரிவித்துள்ள ஸ்டாலின், புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக திமுக என்றும் குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிட்னி முறைகேடு..! இதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? மா.சு.வுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!