நேற்று இரவு கனமழை பெய்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மழைநீர் தேங்கிய பகுதிகளின் தற்போதைய நிலவரம், தண்ணீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மழைநீர் வடிகால்களின் செயல்பாடு, சுரங்கப் பாதைகளைக் கண்காணித்தல், போக்குவரத்தைச் சீரமைத்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை இந்தச் சூழலில் முக்கிய அம்சங்களாக உள்ளன.
மேலும், தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது, நிவாரண முகாம்களில் தேவையான வசதிகளை உறுதி செய்வது, உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு அவற்றை வழங்குவது போன்ற பணிகளிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: சிரிச்சது குத்தமா?... தீயாய் பரவிய வீடியோவால் கொந்தளித்த மேயர் பிரியா... சி.எம்.விஜய்க்கு சரமாரி கேள்வி...!
இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் அதிகாரிகளுக்குப் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறார். மழைப் பாதிப்புகள் தொடர்பாகப் பெறப்படும் புகார்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்படவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சென்னையில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கும், ஏற்கெனவே தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து வெளியேற்றுவதற்கும், போக்குவரத்தைச் சீராகப் பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து, மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியிலும், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மழை தீவிரமடையும் பட்சத்தில், எங்கெல்லாம் மழைநீர் தேங்குகிறதோ அங்கெல்லாம் கூடுதலாக மோட்டார் பம்புகளை அமைத்துத் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திராவிட இயக்க வழியில் வந்தவர்கள் கண்ணியமாக பேச வேண்டும்..! செங்கோட்டையன் அட்வைஸ்.!!