விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தேர்தல் நிதி பெறுவதற்காகவே அம்பானியின் ஸ்டேட் வங்கியின் 48,545 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
பாரத ஸ்டேட் வங்கியின் பணத்தை ரூ.48,545 கோடியை அணில் அம்பானி சூறையாடி விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளதே? என்ற கேள்விக்கு ஸ்டேட் வங்கியை இந்த அரசு எவ்வளவு கொடுமையாக நடத்திக் கொண்டி இருககிறது. பெரும் பணக்காரகர்களான அணில் அம்பானி மற்றும் அதானிக்கு பணத்தை வாரி வழங்குகின்றனர். இதனால் எஸ்.பி.ஐ பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். சிறு முதலீட்டார்களின் பணத்தை எடுத்து பெரும் பணக்காரர்களுக்கு வழங்கும் நிறுவனமாக நிர்மலா சீத்தாராமனும், மோடியும் இருக்கின்றனர் எனக்குற்றச்சாட்டினார்.

பெரிய அளவு கடன் வாங்குவோருக்கு தள்ளுபடியும், சிறிய கடன் வாங்குவோருக்கு நெருக்கடியும் வங்கிகள் தருகின்றனவே என்ற கேள்விக்கு? இது அவர்களின் மிக முக்கியமான சிந்ததாந்தத்தின் ஒரு பகுதி. சிறிய முதலீட்டார்களிடமிருந்த பணத்தை எடுத்து பெரும் பணக்காரர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே ஆகும். குறிப்பாக ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கியவர் பணத்தை திருப்பித் செலுத்தவில்லையெனில் வெறும் ரூ.10கோடியை திரும்பச் செலுத்தினால் போதும், மீதியைத் தள்ளுபடி செய்து விடுவோம் என மோடி அரசு கூறிகிறது. இதை எதிர்த்துதான் போராட்டம். டூவீலர், வீடு வாங்கியவர்களிடம், நெருக்கடி தருகின்றனர். அதானி, அம்பானி போன்றவர்றகள் வாங்கிய கடன் தொகையில் 10 சதவீதம் மட்டும் கட்டினால் போதும் எனக் கூறுகின்றனர். இது இந்தியாவின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளும். இது பெரும் பணக்காரர்களுக்கான அரசாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்பை பறித்து பணக்காரர்களுக்கு வழங்கும் அரசாக உள்ளது.
இதையும் படிங்க: விஜய்யை கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிடவே இல்லையே... கிண்டலடித்த அமைச்சர் கே.என்.நேரு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதங்களில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனரே? என்ற கேள்விக்கு, இது அதிர்ச்சிகரமான செய்தி. பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. இதுகுறித்து விவசாயத் துறை அமைச்சரோ, நிதியமைச்சரோ எவ்வித பதிலும் தரவில்லை. எனவே, வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இப்பிரச்சனை குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன.

இந்தியாவின் வெளி நாட்டுக் கடன்767 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதே? என்ற கேள்விக்கு
ஒவ்வொரு இந்தியன் மீது ரூ.4லட்சத்திற்கு மேல் கடன் சுமையை ஏற்றி வைத்து உள்ளது இந்த மோடி அரசு. இது பெரும் பணக்காரர்களுக்கான அரசு. பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்தை சித்தாந்தம் என கடந்து போகலாமா? என்ற கேள்விக்கு? பெரும் பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யும் பணத்தை வாங்கித் தான் தேர்தலையே சந்திக்கின்றனர். ரூ.10ஆயிரம் கோடி கடன் வாங்கியவரிடம் வெறும் ரூ.10 கோடியை மட்டும் வாங்கி விட்டு ஏன்? தள்ளுபடி செய்கிறார்கள் என்றால், பாஜகவினருக்கான தேர்தல் நிதி பெரும் பணக்காரர்களிடம் இருந்து வருவதால் தான். அதை வைத்து தான் தேர்தலையே சந்திக்கின்றனர். இதற்காகவே தள்ளுபடி செய்கின்றனர் என்றார்.
இதையும் படிங்க: தலைமறைவான நெகல் மோடியை தட்டி தூக்கிய அமெரிக்கா.. விரைவில் நாடு கடத்த திட்டம்..