நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு நேரடியாக பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்வின் வாயிலாக மொத்தம் 37 ஆயிரத்து 877 பேர் பட்டம் பெற உள்ளனர்.
குறிப்பாக, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ் அகர்வால், மும்பை மண்டல துணை காவல் ஆணையர் ராகா சுதா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார்பு நீதிமன்ற மூத்த சிவில் நீதிபதி திரிவேணி உள்ளிட்டோர் முனைவர் பட்டம் பெறவிருந்தனர்.. இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள இருப்பதால் விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படும் என்றும், துணை வேந்தர் சந்திரசேகர் அறிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தொடர்ச்சியாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த சூழலில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என முன்கூட்டியே துணை வேந்தர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா அழைப்பிதழைக் கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு.இராசேந்திரன் திருப்பி அனுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் தான் பட்டங்களை வழங்குவார்..! மாணவர்கள் போராட்டம்.. பல்கலை. நிர்வாகம் திட்டவட்டம்..!
மேலும் ஆளுநர் அர்லேகர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை தவெக எம்.எல்.ஏ. முருகன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் புறக்கணித்திருந்தனர்.
மேலும், கிரிமினாலஜி பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெறவிருந்த தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ் குமார் அகர்வாலும், மேலாண்மை (Management) பாடப்பிரிவில் பட்டம் பெறவிருந்த மும்பை துணை ஆணையரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: நீலகிரியை உலுக்கும் 'சூப்பர் எல் நினோ'..!! தேயிலை சாகுபடியில் கடும் பாதிப்பு!