தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடிகர் விஜய் வருவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், பேகம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், பாமக மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அதிமுகவிற்கு மூன்றாவது இடம் கிடைக்கும் என கூறியது குறித்த கேள்விக்கு, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மட்டுமல்லாமல் யார் கருத்து சொன்னாலும் அது பொய்யானது. மக்கள் அதை பொய்யாக்குவார்கள் அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள்.
இதையும் படிங்க: தவெக கூட்டணிக்கு வருமா? வராதா? நயினார் நாகேந்திரன் பளீச் பதில்..!!
நடிகர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவது குறித்த கேள்விக்கு:- இது குறித்து விஜய் இடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சிக் கூட்டணி வெற்றி பெறும் என்றார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, 210 இடங்களில் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியுடன் வெற்றி பெற்று முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஏற்பார்கள் எனக்கூறினார்.
கரூர் மாவட்டத்தில் திமுகவினர் கூடாரம் அமைத்து மக்களை அடைத்து வைத்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை மாற்ற வேண்டும் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, தற்போது காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார் எனவே உண்மை என தெரிகிறது. கரூர் சம்பவத்தில் மருத்துவமனைக்கு அனைவரும் வந்திருந்தனர் என்னை மட்டும் ஏன் அழைக்கிறார்கள் என செந்தில் பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு, போலீஸ் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்களும் நானும் இதற்கு பதில் சொல்ல முடியாது. பூனை நிற்கிறது எங்கிட்டு விழுகிறது என பார்ப்போம் என்றார்.
இதையும் படிங்க: “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!