தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. திமுக 25 சட்டமன்ற தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. காங்கிரஸ் குறைந்தபட்சம் 33-35 தொகுதிகள் + 2 ராஜ்யசபா சீட்கள் + ஆட்சி பங்கு என கோரி வருகிறது.
இதனால் பேச்சுவார்த்தைகள் சிக்கலாகியுள்ளன. திமுக மார்ச் 3ஆம் தேதி கெடு விதித்துள்ளது. ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு தாக்கல் மார்ச் 5ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், காங்கிரஸ் இழுத்தடிப்பதால் கூட்டணி உடையும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக வட்டாரங்கள் கூறுகையில், "திமுக கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை. கூடுதல் தொகுதிகள் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்" என்றனர்.
இதையும் படிங்க: கூட்டணிக்கு சரிபட்டு வரலையா? காங்கிரசை உடைச்சிருவோம்!! ஓட்டு கை நழுவாமல் இருக்க ஸ்டாலின் வியூகம்!
தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பிப்ரவரி 28ஆம் தேதி டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்தார். மார்ச் 1ஆம் தேதி ஹைதராபாத் சென்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரை சந்தித்து பேசினார். அங்கு வேணுகோபால் உடன் போன் மூலம் ஆதவ் பேசியதாக தகவல்.

இதனால் மார்ச் 1ஆம் தேதி தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆதவ் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் மேலிடத்தில் பலர் தவெகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டுகின்றனர். தவெக இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்று வருவதால், கூடுதல் தொகுதிகள் + ஆட்சி பங்கு பெற முடியும் என கணக்கு போடுகின்றனர்.
ஆனால் இண்டி கூட்டணி தலைவர்கள் மூலம் ராகுல் காந்திக்கு திமுக நெருக்கடி கொடுப்பதால், வெளிப்படையான பேச்சு நடக்கவில்லை. சபரீசன், கனிமொழி போன்றோர் ராகுலை தொடர்ந்து சந்தித்து வருவதால் தவெக பேச்சு ரகசியமாக நடக்கிறது.
வேணுகோபால் "ஓரிரு நாட்கள் காத்திருங்கள்" என உறுதியளித்துள்ளார். சென்னை திரும்பிய ஆதவ் விஜயிடம் விவரங்களை தெரிவித்தார். விஜய் உயர்மட்ட கூட்டம் நடத்தி ஆலோசனை செய்தார். தவெகவினர் "ஒரு சில நாட்களில் கூட்டணி விவரங்கள் வெளியாகும்" என தெரிவித்தனர்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், தவெக-காங்கிரஸ் கூட்டணி உருவாகி தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. விஜய் ரூட் வேற மாதிரி - இளைஞர்கள் ஆதரவுடன் புதிய அணி உருவாகலாம்!
இதையும் படிங்க: காங்., கேட்பதில் என்ன தப்பு? ஆட்சி அதிகார பகிர்வு! ஆட்டத்தை ஆரம்பித்தார் திருமாவளவன்!