செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து இறங்கினாலும் கொங்கு மண்டலத்தில் அவரது செல்வாக்கை கணக்கில் வைத்து தேர்தலுக்காக முக்கியமான பொறுப்பு ஒன்றை அவரிடம் கொடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் டிக்கடித்துள்ளதாக சொல்கின்றனர். 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து திமுகவில் வேலைகள் வேகம் எடுத்துள்ளன. இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை, அமைச்சர்களுடன் ஆலோசனை என அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தேர்தலுக்காக மண்டல அளவில் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் லிஸ்ட் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, சக்கரபாணி, தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்பிக்கள், கனிமொழி, ஆராசா ஆகியோர் இந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மண்டல அளவில் கட்சியை வளமாக வைத்திருப்பது முக்கியம் என்பதால் மூத்த அமைச்சர்கள், ஒவ்வொரு மண்டலத்திலும் செல்வாக்காக இருப்பவர்கள், கட்சியில் ஆக்டிவாக இருப்பவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமாக இருப்பவர்கள் என பார்த்து பார்த்து கணக்கு போட்டு இந்த லிஸ்ட் ரெடியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கொங்கு மண்டலத்தை செந்தில் பாலாஜியிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக சொல்கின்றனர். செந்தில் பாலாஜி மீதான வழக்கில் ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா என உச்சநீதிமன்றம் கறார் காட்டியதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து இறக்கும் முடிவை எடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையும் படிங்க: மீண்டும் செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு... திமுக போடும் தேர்தல் கணக்கு!
செந்தில் பாலாஜிக்கு அடுத்தப்படியாக கொங்கு மண்டலத்தை ஈரோடு முத்துசாமியை பொறுப்பு அமைச்சராக நியமித்தது திமுக தலைமை. ஆனால் அவர் சிறப்பாக செயல்படவில்லை என அறிவாலயத்திற்கு திமுக உ.பி.கள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்செட் ஆன தலைமை தற்போது மீண்டும் அவருக்கே கொங்கு மண்டல பொறுப்பை ஒதுக்க தீர்மானித்துள்ளதாம்.

கொங்கு மண்டலத்தில் செல்வாக்கான நபராக வளம் வரும் செந்தில் பாலாஜியிடம் மண்டல பொறுப்பாளர் பதவியை கொடுத்து கட்சியில் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. கொங்கு மண்டலத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்து வரும் செந்தில் பாலாஜி கைகாட்டும் நபர்களுக்கே முதலமைச்சர் ஸ்டாலின் வாய்ப்பு கொடுப்பதாக திமுக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. இந்த தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி நிறைய கணக்குகளை போட்டு வைத்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் அமைச்சர் பதவியிலிருந்து இறக்கப்பட்ட பொன்முடிக்கு எந்த பதவியும் வழங்க ஸ்டாலின் ரெடியாக இல்லை என சொல்கின்றனர். அவருக்கு பதிலாக அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பை அமைச்சர் எ.வ. வேலு ஒப்படைக்க விருப்பப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஃப்யூஸை பிடிங்கியும் பவர் காட்டும் செந்தில் பாலாஜி டீம்... கோவையில் கெத்து காட்டும் போஸ்டர்ஸ்..!