திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவிலை திமுக அரசு இடித்துத் தரைமட்டமாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகவும், திருப்பூர் புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடையதாகவும் இந்தக் கோவில் விளங்கி வருகிறது.
வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பாக கோவில் உள்ளதாகக் கூறி, ஜனவரி 7ஆம் தேதி காலை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் சென்று கோவிலை முழுமையாக இடித்துள்ளனர். இதைத் தடுக்க முயன்ற பக்தர்களுக்கும் இந்து முன்னணி உறுப்பினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.
இதையும் படிங்க: ஏன் மிரட்டுறீங்க!! காங்., எம்.பியிடம் கேள்வி கேட்டவர் மீது தாக்குதல்?! அண்ணாமலை ஆவேசம்!
இந்தச் சம்பவத்துக்கு தமிழக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் கோவை தொகுதி வேட்பாளருமான கே.அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சென்னை உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு பழிவாங்கும் விதமாக திமுக அரசு இந்தக் கோவிலை இடித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடைய கோவில் இது.
இந்த நிலையில்,… pic.twitter.com/zbKkfrqGAP
— K.Annamalai (@annamalai_k) January 7, 2026
திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை மீட்க வக்கில்லாத அரசு, பொதுமக்கள் தலைமுறைகளாக வழிபட்டு வரும் பழமையான கோவில்களைத் தொடர்ந்து இடித்து வருவதாக அண்ணாமலை சாடினார். போலி மதச்சார்பின்மை பேசி ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிக்கும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
காயமடைந்த இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட கைது செய்யப்பட்ட அனைத்து பக்தர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் ஹிந்து அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசின் இந்த நடவடிக்கையை ஹிந்து விரோதம் என்று கண்டித்து வருகின்றன.
இதையும் படிங்க: எல்லாம் புகழும் முருகனுக்கே!! திருப்பரங்குன்றம் தீப வழக்கு!! ராம ரவிக்குமார் மகிழ்ச்சி!