ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருப்பவர்கள் திமுகவில் இணைவது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்கள் யோசித்து அவர்களாகத்தான் முடிவெடுத்து வருகின்றனர். யாருக்கும் நாங்கள் அழுத்தம் தருவதில்லை. யாரையும் எந்த கட்சியும் வேண்டாம் என்று சொல்வதில்லை. ஆனால் அவர்கள் சூழ்நிலையை பொறுத்து அவர்களே முடிவேடுப்பார்கள். அதில் நாங்கள் தலையிடுவதில்லை,
பாஜக நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அதிமுக பிரச்சனையில் பாஜக பின்னணியில் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அதிமுகவில் இருப்பது உட்கட்சி பிரச்சனை. அதில் நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை, அதிமுக.வின் உட்கட்சி விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை. அரசியல் ரீதியாக செயல்பாடுகளை மட்டுமே விமர்சிக்கிறோம். கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தை விமர்சிப்பது அநாகரீகமாக கருதுகிறோம்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. நிறைய வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் பதிவை செய்ய முடியாத நிலை உள்ளது் இதற்காகத்தான் திமுக தலைவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி 11ஆம் தேதி போராட்டம் அறிவித்திருக்கின்றார். ஈரோட்டிலும் தோழமை கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்.
இதையும் படிங்க: ஸ்டாலின் ஆட்சியின் வாக்குறுதி என்னாச்சு? முதல்வருக்கு நயினார் சரமாரி கேள்வி...!
சரியான வாக்காளர் பெயர் சேர்க்கப்பட வேண்டும், எந்த வாக்காளரும் விடுபட்ட கூடாது, எந்த கட்சிக்கு வாக்களிப்பவர்களாக இருந்தாலும் வாக்களிக்க உரிமை பெற்ற அனைவரும் எந்த தடையும் இல்லாமல் சேர்க்கப்பட வேண்டும் திட்டமிட்டு யாரையும் நீக்கிவிடக்கூடாது.
ஓட்டு உரிமை உள்ளவர்கள் அனைவரும் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் குரல் கொடுத்து வருகிறோம் எனக் கூறினார்.
இதையும் படிங்க: நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!