புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று 06.12.25 வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்துகொண்டு புரட்சியாளர் அம்பேத்கருக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் எந்த கருத்தும் இதுவரை கூறவில்லை என்ற கேள்விக்கு :- இதுகுறித்து விஜய் இடம் தான் கேட்க வேண்டும்.இவர் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை அரசியல் கட்சியாக இருந்தால் கண்டிப்பாக கருத்து கூறுவார்கள்.
இதையும் படிங்க: தவெக + காங்கிரஸ் கூட்டணி... “ராகுல் காந்தியிடம் நேரடியாக கேட்போம்...” - செல்வப்பெருந்தகை ஓபன் டாக்...!
எஸ். ஐ.ஆர் பணிகள் குறித்த கேள்விக்கு எனது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரே இரவில் குடி பெயர்ந்தவர்கள் இறந்தவர்கள் எனக் கூறி 22,000 வாக்காளர்களை நீக்கி உள்ளனர் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பி.எல்.ஓ.கள் வாக்காளர்களை சேர்ப்பதற்காக வீடு வீடாக செல்லவில்லை அறையில் அமர்ந்து ஒரே இரவில் நீக்கி விட்டார்கள். வாக்காளர்கள் முறையாக பூர்த்தி செய்த கொடுத்த விண்ணப்பித்தினையே குடிபெயர்ந்து விட்டனர் எனக் கூறி மாற்றிவிட்டனர். இதுபோன்ற அதிசயம் ஆத்தூர் தொகுதியில் நடைபெற்றுள்ளது.
சூப்பர் செக் மூலம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறுவது தவறு. எந்த ஊரிலும் போய் அவர்கள் ஆய்வு மேற்கொள்ளவில்லை இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர் பாலக்கனூத்து நரிப்பட்டி நீல மலைக்கோட்டை போன்ற பகுதியில் இறந்தவர்களை வாக்காளர் பட்டியல் சேர்த்துள்ளனர்.
எஸ் ஐ ஆர் பணிகள் மிகவும் குளறுபடியாக உள்ளது அவர்கள் எங்குமே சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கவில்லை கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக வேலை பார்த்து வருகின்றனர் எஸ் ஐ ஆர் பணிகள் முழுமையாக சரியாக நடைபெறவில்லை. ஆகையால் எஸ் ஐ ஆர் பணிகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எஸ் ஐ ஆர் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறித்த கேள்விக்கு, மேல் முறையீடு செய்வது என்பது எங்களது அடிப்படை உரிமை நீதிமன்றம் கொடுக்கக்கூடிய தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இல்லை. சட்டமே சொல்கிறது உங்களது உரிமைகளை பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் என கூறியுள்ளது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம் என தெரிவித்தார்
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே விஜய்க்கு பேரதிர்ச்சி... உளவுத்துறை கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்... புதுச்சேரி ரோடு ஷோவில் திடீர் மாற்றம்...!