புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த நான்காண்டு சாதனை மலரை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வெளியிட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, ஒரு அரசியல் தலைவரின் உடல் நலத்தை பற்றி அபாண்டமாக குற்றம் சாட்டு சொல்வது போன்ற மட்ட ரகமான செயல் உலகத்தில் கிடையாது. அதை எடப்பாடி பழனிச்சாமி செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் தோல்வி என்பது அவரது கண்ணுக்கு தெரிந்து கொண்டிருக்கிறது. தோல்வியை பார்க்கின்ற காரணத்தினால் கண்ணா பின்னா என்று பேசி வருகிறார். அவர் தன்னை மறந்து கத்துகிறார் உளறுகிறார் இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.
ஒவ்வொரு திட்டத்தையும் குறிப்பிட்ட காலத்தில் தான் கொண்டுவரமுடியும் இப்போது திட்டங்கள் கொண்டவரப்படுகிறது ஏற்கனவே வருமுன் காப்போம் திட்டமாக இருந்தது தற்போது நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று மக்களின் நலனின் அக்கறை எடுத்துக்கொண்டு மக்களின் உயர் சிகிச்சைக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே வருமுன் காப்போம் என்பது அடிப்படை நோய் இருக்கிறதா? என்று கண்டறிவதற்கு. இன்று கொண்டு வந்த நலம் காக்கும் ஸ்டாலின் 17 உயர் ரக சிகிச்சைக்கான திட்டம். இந்த திட்டம் கிராம மக்களுக்கு பேர் உதவியாக இருக்க கூடிய திட்டம். இதை கண்ணால் கண்டவர்களுக்கு ஏற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக இந்த திட்டம் மிக சிறந்த வரவேற்கக் கூடிய திட்டம்.
பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க நயினார் நாகேந்திரன் தேதி வாங்கி கொடுத்திருப்பேன் என்று கூறியது குறித்த கேள்விக்கு பாஜக கட்சியில் பிரதமர் மோடியை விட நயினார் நாகேந்திரனுக்கு அதிக அதிகாரம் இருக்கிறது ஏன்று எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்குள் பாமக, தேமுதிக - சீட்டு கணக்கை போட ஆரம்பித்துவிட்டாரா ஸ்டாலின்? - அமைச்சர் ரகுபதி அதிரடி கருத்து...!
ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளார். அவர் எப்போதே வெளியே வந்திருக்கலாம். தற்போது அவர் வந்திருப்பதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது. திட்டங்களுக்கு அரசியல் கட்சியின் பெயர்களை வைக்கக்கூடாது என்ற விவகாரத்தில் இரண்டு நாட்களில் பதில் சொல்ல நீதிமன்றம் கூறியுள்ளது. எங்களது வழக்கறிஞர்கள் அதற்கான விளக்கத்தை சொல்வார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை மதவாத கட்சி இல்லை என்று ஏற்றுக்கொண்டால் அதுபோல் ஒரு துரோகம் ஒன்றுமே கிடையாது. அவர் கூட்டணி வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாமே தவிர பாஜகவிற்கு வக்காலத்து வாங்குவதற்காக பாஜக மதவாத கட்சியே இல்லை என்று கூறுவது பச்சை பொய்.
ஓபிஎஸ்-க்கு அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற விமர்சனம் ஒருவருக்கு அரசியல்வாதி முடிகிறதா ஆரம்பமாகிறதா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும். யாருடைய அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று போக போக தான் தெரியுமே தவிர திடீரென்று அரசியல் வாழ்க்கையில் ஜோசியம் சொல்ல முடியாது. ஒரு சம்பவத்தில் ஒருவர் உச்சத்திற்கு கூட செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நிலைத்து நிதானமாக இருக்கக்கூடிய ஒரு அரசியல் தலைவர் எங்கள் தலைவர் மு க ஸ்டாலின்.
2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது அப்பட்டமாக பொய் என்பதை நிரூபித்து திமுக மிகப்பெரிய வெற்றியை திருமயம் தொகுதியில் பெரும். அதற்கான அடித்தளங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு நாங்கள் செய்ததைப் போல் திருமயம் தொகுதியில் வேறு யாரும் செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமியோ வேறு யாரோ இந்த இந்த திட்டங்களை கொண்டு வந்தேன் இந்த திட்டங்களை நாங்கள் கொண்டு வரவில்லை என்று கூறினால் அதற்கு பதில் சொல்லலாம் எதையுமே கொண்டு வராத எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் என்பதில் சொல்ல வேண்டும். நான் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன் என்பது எனது தேர்தல் பரப்புரையில் எங்கள் தலைவர் அனுமதித்தால் சொல்லப்படும்.
வெளிமாநிலத்தவர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் அதற்கான தகுந்த முறையீடுகளை நாங்கள் எடுத்து வைப்போம். யார் எங்கே வாக்களிக்க வேண்டும் என்ற உரிமையும் இருக்கிறது. அதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை நிச்சயமாக தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
தமிழ்நாட்டின் வாக்காளர்களுடைய மனநிலை வேறு பீகார் மாநிலத்தின் வாக்காளர்களின் மனநிலை வேறு ஆக இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அதனால் அதைப் பற்றி அந்த நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் உரிய முறையில் கொண்டு செல்வார்.
நிச்சயமாக நாங்கள் சரியாக செயல்படுவோம் எங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. எதுலயும் மாட்டிக் கொள்ளவும் மாட்டோம் தப்பு செய்யவும் மாட்டோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: “எங்க கூட்டணியை பார்த்து நீங்கள் ஏன் கவலைப்படுறீங்க?” - திமுகவை பார்த்து நறுக் கேள்வி கேட்ட எடப்பாடி...!