திமுகவின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்து முடிந்தது. அஙகு இளைஞர்களை அதிக அளவில் 30 சதவீதத்துக்கு மேல் புதிய உறுப்பினர்களாக திமுகவில் இணைக்கணும் அப்படின்னு டார்கெட் பிக்ஸ் பண்ணி இருக்காராம் முதலமைச்சரும் திமுகவுடைய தலைவருமான மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் ஏன் மதுரையை தேர்வு செஞ்சாங்க?, ஏன் இளைஞர்களை கூடுதலாக சேர்க்க டார்கெட் பண்றாங்க அப்படிங்கிறதுக்கான காரணம் தெரியவந்திருக்கு. அதுக்கு காரணம், புதிதாக அரசியல் களத்துக்கு வந்திருக்கிற விஜய் உடைய தமிழக வெற்றி கழகம் தானாம். அந்த கட்சியில் விஜயால் ஈர்க்கப்பட்ட அதிக அளவிலான இளம் பெண்கள், இளைஞர்கள் இணைஞ்சிக்கிட்டு இருக்காங்க.

இப்படி தமிழக வெற்றிக் கழகத்திற்கு இளம் தலைமுறை மற்றும் முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு அதிகமாச்சுன்னா. அது தேர்தலில் திமுகவிற்கு பலத்த அடியாக மாறும் என திமுக தலைமை யோசிக்கிறதாம். தேர்தல் நேரத்துல நூல் இலையில கூட வெற்றி வாய்ப்பு பரி போய்விடக்கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் கூடுதல் கவனமா இருக்காராம்.

இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள்... தேதி குறித்த விஜய் - டரியலில் திமுக, அதிமுக...!
அதனால் தான் அனைத்து தொகுதிகளிலும் இளைய சமூகத்தினரை திமுகவில் புதிய உறுப்பினர்களாக சேர்க்க மாவட்ட செயாளர்களுக்கு டார்க்கெட் கொடுத்திருக்கிறாராம். அடுத்து விஜய் கவனம் செலுத்தக்கூடிய இடமாக மதுரை உள்ளதால் தான், மதுரையில் இருந்து தங்களுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறதாம் திமுக. இந்த மதுரை பொதுக்குழு கூட்டத்துக்கு திமுகவுடைய இளைஞர் அணியினர் குறிப்பாக மதுரை மாவட்ட இளைஞர் அணியினர் அதிகளவில் கலந்து கொண்டனர். இது திமுகவின் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுது.
இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்த சர்ச்சை கருத்து... விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!!