பிரபல நடிகர் சத்யராஜி்ன் மகள் திவ்யா. ஊட்டச்சத்து நிபுணரான இவர், கடந்த ஜனவரி மாதம் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். திமுகவில் இணைந்த பின் திவ்யா சத்யராஜ், தவெக கட்சியையும், அக்கட்சியின் தலைவர் விஜய்யையும் கடுமையாக சாடி வருகிறார்.

இந்த நிலையில் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்று விமர்சித்துள்ளார். இதுக்குறித்த அவரது பதிவில், தவெவிற்கு என ஒரு தனிச்சிறப்பு உள்ளது. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தவெகதான். பெண்களை மதிக்காத தொண்டர்கள் அதிகமாக உள்ள ஒரே கட்சியும் தவெகதான் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சி கொடியில் யானை சின்னம்; தவெக மீது பகுஜன் சமாஜ் வழக்கு; புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு!!

ஒருபுறம் இவர் விமர்சிக்க மறுபுறம் தவெகவில் இருந்து அண்மையில் விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தவெக தலைவர் விஜய் முன்வைக்கும் கருத்துக்களுக்கு தனது எக்ஸ் தளத்தில் நேரடியாக பதிலடி விமர்சனத்தை வைஷ்ணவி முன்வைத்து வருகிறார்.

கட்சியில் இருந்து விலகியதும், தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லை, கட்சிக்காக பணியாற்றியவர்களுக்கு மதிப்பு இல்லை, நீண்ட காலம் கட்சிக்காக வேலை செய்தவர்களுக்கு மதிப்பு இல்லை, முக்கியமாக பெண்களை மதிப்பதே இல்லை என்றெல்லாம் கடுமையான புகார்களை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ‘அப்பா’ ஸ்டாலினுக்கு ஆப்பு வைத்த சுட்டி பையன்... விஜய் முன்னாடி நின்னு திமுகவுக்கு விட்ட சவால்...!