தமிழகத்தில் மீண்டும் மத உணர்வுகளை புண்படுத்தும் பேச்சு சர்ச்சை எழுந்துள்ளது. சேலம் தொகுதி திமுக எம்பி செல்வகணபதி அண்மையில் சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்து மத வழிபாடு மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை கேலி செய்யும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவில்களில் கடவுளுக்கு வழிபாடு நடக்கும்போது செய்யப்படும் சடங்குகள், மந்திரங்கள் போன்றவற்றை கிண்டல் செய்து, "நான் சொன்னது எனக்கும் புரியாது, உனக்கும் புரியாது" என்று கூறியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான இந்து மக்கள் புனிதமாக கருதும் வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்தியதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்: "ஒரு எம்பி ஒரு மதத்தின் வழிபாட்டு முறையை கேலி செய்யலாமா? ஹிந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தலாமா?" என்று சமூக ஊடகங்களில் பதிவுகள் பெருகியுள்ளன. திமுகவின் இந்து விரோத போக்கு தொடர்கதையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த பேச்சு மேலும் சர்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை மக்களை கொச்சைப்படுத்தினாரா தயாநிதி?! கொங்கு மக்கள் கொந்தளிப்பு!! பாஜக தலைவர்கள் கண்டனம்!

ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி இதே போன்று இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி பேசியதால் பதவியை இழந்தார். இப்போது செல்வகணபதியின் பேச்சும் அதே வரிசையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, திமுக தலைமை உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்த சம்பவம் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மத உணர்வுகளை மதிக்காத போக்கு தொடர்ந்தால் மக்கள் ஆதரவு குறையும் என்ற அச்சம் கட்சியினரிடையே எழுந்துள்ளது. பலர் திமுக தலைமையிடம் நடவடிக்கை எடுக்க கோரி வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதால் சர்ச்சை மேலும் பரவி வருகிறது. மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது!
இதையும் படிங்க: காங்., கேட்பதில் என்ன தப்பு? ஆட்சி அதிகார பகிர்வு! ஆட்டத்தை ஆரம்பித்தார் திருமாவளவன்!