• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, January 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026 தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.. டெல்லி எஜமானர்களிடம் சொல்லிடுங்க.. நயினாரை நயப்புடைத்த ஆர்.எஸ். பாரதி!!

    தமிழக உரிமைகளை பறித்தால் முன்பைபோல பாஜக 2026 தேர்தலிலும் டெபாசிட்கூட வாங்காது என எஜமானர்களுக்கு நயினார் நாகேந்திரன் சொல்வது நல்லது என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Wed, 16 Apr 2025 20:45:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK organization secretary RS Bharathi says bjp won't get deposit in 2026 election

    இதுதொடர்பாக ஆர்.எஸ். பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்," தமிழக சட்டப்பேரவையில்  110 விதியின் கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில நலனில் அக்கறை இல்லாத அதிமுகவும் அதன் கூட்டாளியாக பாஜகவும் வெளிநடப்பு செய்தன. இதன் மூலம் டெல்லி சர்வாதிகாரத்தின் அடிமைகள் நாங்கள் என அதிமுக, பாஜக உறுப்பினர்கள் தங்களை வெளிப்படுத்தினர். மாநில நலன் மற்றும் மாநில சுயாட்சி சார்ந்து திமுக போராடியபோதெல்லாம் அண்ணா காலத்தில் இருந்தே “பிரிவினைவாதம் பேசுகிறது திமுக” என அவதூறு பரப்பினார்கள். இப்போது அதே அவதூறை மோடி அமித் ஷாவின் தமிழக புதிய ஏஜெண்ட் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

    ADMK

    “மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் எனப் பிரிவினைவாதத்தை முதல்வர் தூண்டுகிறார்” என நயினார் நாகேந்திரன் பேசியதில் இருந்தே அதிமுகவில் இருந்த அவருக்கு அண்ணாவின் அடிப்படை சித்தாந்தம்கூட தெரியாத ரசிக மனநிலையில் இருந்திருப்பதை காட்டுகிறது. “மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும்; இந்தியாவும் வலிமை பெறும்” என்று சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை கேட்டிருந்தாலே அவரின் நல்ல நோக்கம் புரிந்திருக்கும். டெல்லி எஜமானர்கள் கோபித்துக்கொண்டால் பதவிக்கு ஆபத்து நேருமோ என்ற பதற்றத்தில் அவசரமாக பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு, அவதூறு கருத்தை ஊடகங்கள் மூலம் நயினார் நாகேந்திரன் பரப்பி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    ADMK

    இந்தியா என்பது முழு உடல், அதன் உறுப்புகள்தான் மாநிலங்கள் என்பதையே அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகள் சொல்கின்றன. மாநிலங்களுக்கான பலம் என்பது இந்தியாவிற்கான பலம். அதாவது, மாநிலங்கள் பலம் பெற்றால்தான் இந்தியா வலுப்பெறும். நமது உடலில் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கினால்தான், முழு உடலும் வலுப்பெறும் என்ற அடிப்படைக்கூட தெரியாதவராக நயினார் நாகேந்திரன் இருப்பதை பார்த்தாலே திராவிடக் கட்சியில் இருந்து அதற்கு நேரெதிர் கொள்கை கொண்ட ஆரிய கட்சிக்கு சென்றதற்கான காரணம் விளங்கும். உடலில் உள்ள உறுப்புகள் பலம் பெறுவது, முழு உடலை வலிமையற்றதாக்கி விடுமா? என்பது போல மாநில உரிமைகளை திமுக கோருவது இந்திய நாட்டை வலிமையற்றதாக மாற்றிவிடுமா? என்பதற்கு நயினார் நாகேந்திரன் பதில் சொல்ல வேண்டும்.

    இதையும் படிங்க: திமுக வாக்குகள் பிரிப்பு.. பாஜக கூட்டணிக்கு நல்லது செய்யும் விஜய்.. பாஜக நிர்வாகி தாறுமாறு!!

    ADMK

    முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரையில் “ஒற்றுமையைப் பாதிக்காத வகையில் உரிமையை மீட்டு எடுப்போம்” என்று குறிப்பிட்டதன் அர்த்தம் நயினார் நாகேந்திரனுக்கு தெரியுமா?
    அண்ணா உருவாக்கிய மாநில சுயாட்சி என்கிற கருவிற்கு கருணாநிதி உருவம் கொடுத்தார்; அந்த உருவத்திற்கு தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்வடிவம் கொடுத்து வருகிறார். இந்த அரசியல் நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை என்றால் அதிமுக என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்கு வெட்கப்பட வேண்டுமா?
    “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்பைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதை கேட்டாலே தமிழகத்துக்கு மட்டும் உரிமைகளை திமுக கேட்கவில்லை. மத்திய-மாநில அரசுகள் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் செயல் எப்படி பிரிவினைவாதமாகும்?

    ADMK

    நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் கும்பலும் குஜராத்தை சேர்ந்த பாஜக தலைமையும் ஏவும் பணியை மாநிலங்களில் உள்ள பாஜக தலைமை சிரமேற்று செய்து முடிப்பது போல மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரும் இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் நினைப்பது அவரின் அரசியல் புரிதல் குறைப்பாட்டை காட்டுகிறது. “திமுக பிரிவினைவாதம் பேசுகிறது” என திராவிட எதிர்ப்பாளர்கள் பேசிய 50 ஆண்டுக் கால பழைய முனை மழுங்கிய வாதத்தை விட்டுவிட்டு, மத்திய அரசின் கட்டளைக்கு அடிபணியும் மாநிலம் தமிழ்நாடு இல்லை; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்கின்ற பரந்துபட்ட கொள்கை முழக்கம் திமுகவுடையது மட்டுமல்ல தமிழக மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம் என்பதால் தமிழக உரிமைகளை பறித்தால் முன்பைபோல பாஜக 2026 தேர்தலிலும் டெபாசிட்கூட வாங்காது என எஜமானர்களுக்கு நயினார் நாகேந்திரன் சொல்வது நல்லது.” என்று அறிக்கையில் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழல்... முதல்வர் மு.க ஸ்டாலினுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!!

    மேலும் படிங்க
    தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய இலங்கை அதிபர்..!! ஆனால் மீனவர்கள் கேட்பதை இதைத்தான்..!!

    தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய இலங்கை அதிபர்..!! ஆனால் மீனவர்கள் கேட்பதை இதைத்தான்..!!

    உலகம்
    இயக்குநர் சுந்தர்.சி வெகுவாக பாராட்டிய “மாயபிம்பம்” படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    இயக்குநர் சுந்தர்.சி வெகுவாக பாராட்டிய “மாயபிம்பம்” படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    பாலமேடு ஜல்லிக்கட்டில் சுவாரசியம்..!! உதயநிதிக்கு காளை சிற்பத்தை வழங்கினார் சூரி..!!

    பாலமேடு ஜல்லிக்கட்டில் சுவாரசியம்..!! உதயநிதிக்கு காளை சிற்பத்தை வழங்கினார் சூரி..!!

    தமிழ்நாடு
    பொங்கலில் விஜய் படம் தான் இல்ல..! ஆனா கலக்கலான மலேசியா வீடியோவால் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    பொங்கலில் விஜய் படம் தான் இல்ல..! ஆனா கலக்கலான மலேசியா வீடியோவால் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    சினிமா
    மருத்துவ அவசரம்..!! பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்..!! நாசா அதிரடி உத்தரவு..!!

    மருத்துவ அவசரம்..!! பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்..!! நாசா அதிரடி உத்தரவு..!!

    உலகம்
    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் அநீதி! ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்த கும்பல்!

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் அநீதி! ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்த கும்பல்!

    இந்தியா

    செய்திகள்

    தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய இலங்கை அதிபர்..!! ஆனால் மீனவர்கள் கேட்பதை இதைத்தான்..!!

    தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய இலங்கை அதிபர்..!! ஆனால் மீனவர்கள் கேட்பதை இதைத்தான்..!!

    உலகம்
    பாலமேடு ஜல்லிக்கட்டில் சுவாரசியம்..!! உதயநிதிக்கு காளை சிற்பத்தை வழங்கினார் சூரி..!!

    பாலமேடு ஜல்லிக்கட்டில் சுவாரசியம்..!! உதயநிதிக்கு காளை சிற்பத்தை வழங்கினார் சூரி..!!

    தமிழ்நாடு
    மருத்துவ அவசரம்..!! பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்..!! நாசா அதிரடி உத்தரவு..!!

    மருத்துவ அவசரம்..!! பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்..!! நாசா அதிரடி உத்தரவு..!!

    உலகம்
    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் அநீதி! ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்த கும்பல்!

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் அநீதி! ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்த கும்பல்!

    இந்தியா
    #BREAKING: மருந்து கொள்முதலில் முறைகேடா? வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

    #BREAKING: மருந்து கொள்முதலில் முறைகேடா? வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

    தமிழ்நாடு
    கேரளாவில் 24 லட்சம் பேர் நீக்கம்? யார் யாரை நீக்குனீங்க? லிஸ்ட் கொடுங்க! சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!!

    கேரளாவில் 24 லட்சம் பேர் நீக்கம்? யார் யாரை நீக்குனீங்க? லிஸ்ட் கொடுங்க! சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share