திருமங்கலம் அருகே கப்பலூரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக 2018 - இல் மதுரையில் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரே ஒரு செங்கலை கையில் எடுத்துக் கொண்டு, பிரச்சாரம் மேற்கொண்டு மோடியை தோற்கடித்த பெருமை தற்போதைய துணை முதல்வரான உதயநிதிக்கு சாறும். அதற்குப் பின்னால் நடைபெற்ற அத்தனை தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் , 2021 சட்டமன்ற தேர்தல், இத்தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது சொந்த தொகுதியான சேப்பாக்கத்தில் மட்டும் மொத்தத்தில் நான்கு மணி நேரமே பிரச்சாரம் மேற்கொண்டார். எஞ்சிய நாட்கள் அனைத்தும் கழகத் தோழர்களுடைய வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் தனது பிரச்சார பயணத்தை செய்தார் உதயநிதி.
எடப்பாடி பழனிசாமியுடைய வழக்குகளிலிருந்து விடுபட காரணமானவர் செங்கோட்டையன். இந்த செங்கோட்டையன் தற்போது மாற்று கட்சிக்கு சென்றுள்ளார்.அவரைப் பின் தொடர்ந்து சில பேர் செல்ல உள்ளதாகவும் தகவல், ஆகவே நாம் யாரை திட்டுகிறோமோ? அவர்கள் மாற்று கட்சிக்கு சென்றுள்ளபடியால், தற்போதைய நிகழும் சமயத்திற்கு, யாரையும் நாம் திட்ட வேண்டாம் , பிறகு மாற்று கட்சிக்கு அங்கு செல்வர் அல்லது திமுகவுக்கு வருவதற்கு நேரிடும்.திமுகவை எதிர்த்து பேசுபவர்கள் அனைவரும் அப்பாவிற்கு சோறு போடாமலும், அம்மாவையும் பாட்டில் கொண்டு அடிப்பவறுமாகவே இருக்கின்றனர்.
ஆனால் , திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை பார்த்து , தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலினை இந்தியாவே உற்று நோக்கி பார்க்கின்றது. திருப்பரங்குன்றம் சம்பவத்தைப் பார்த்து நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு அயோத்தியாக மாறி இருக்கிறது என்றார் , ஆனால் அயோத்தியில் மசூதியை தகர்த்து விட்டு , ராமர் கோயில் கட்டி முடித்த , பாஜக தேர்தலின் போது அதே அயோத்தியில் பாஜக படுதோல்வி அடைந்தது. அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் நயினார் நாகேந்திரன் பேசுகிறாரோ? என்னவோ? தமிழ்நாட்டிலும் பாஜக தோற்கப் போகிறது என்பதை மறைமுகமாக சொல்கிறார் போல தெரிகிறது.
இதையும் படிங்க: தலைக்கு ரூ.500 - டெல்லியில் கிழிந்து தொங்கிய ராமதாஸ் முகமூடி... டிக்கெட்டு காசை கணக்கு பார்த்து மொத்தமா போச்சே...!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு கூறிய அதே நீதிபதி சுவாமிநாதன், கோயில்களில் அன்னதானம் சாப்பிட்டபின் போட்ட எச்சிலையின் மீது உருண்டு சென்றால் நல்லது என சொன்னதை சுட்டிக்காட்டி, அதே நீதிபதி சொன்னதை பாஜக நயினார் நாகேந்திரன் எச்சிலையில் உருளத் தயாரா ? என பதிலடி கொடுத்தார். வருகிற சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி எனவும் பேசினார்.
இதையும் படிங்க: அராஜகம் செய்யும் தேர்தல் ஆணையம்..!! டெல்லிக்கு போகும் பாமக..!! களமிறங்கிய ராமதாஸ்..!!