திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக அரசியலில் நீண்டகாலமாக இணைந்து பயணித்து வரும் கூட்டணி உறவைக் கொண்டுள்ளன. இந்த உறவு வெறும் தேர்தல் வசதிக்காக மட்டுமல்லாமல், சமூக நீதி, மதச்சார்பின்மை, தலித் உரிமைகள், பாஜக எதிர்ப்பு போன்ற கொள்கை அடிப்படையில் வலுப்பெற்றதாக உள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலியுறுத்தி வருகிறார்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்று வருகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் விசிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அது 6 தொகுதிகளாகக் குறைக்கப்பட்டது. இதனால் விசிக தரப்பில் சில அதிருப்திகள் எழுந்தாலும், பாஜகவின் மதவாத அரசியலைத் தடுக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் கூட்டணியைத் தொடர்ந்து வருகிறார்கள்.

விசிக தன்னை வெறும் இடங்களுக்காகப் பேரம் பேசும் கட்சியாகக் கருதவில்லை என திருமாவளவன் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.தற்போது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 28 தொகுதிகள், மதிமுக 4, ஐயூஎம்எல் 2, மனிதநேய மக்கள் கட்சி 2 உள்ளிட்ட சில கட்சிகளுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! திமுக வேட்பாளர் தேர்வு தீவிரம்..! 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்..!!
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழுவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு... தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!