புதிய நீர்நிலைகளை உருவாக்கும் திட்டம் உண்டு அதற்காக பணம் தான் வேண்டும் வேலூர் கோட்டை மைதானத்தை ஆய்வு செய்த பின்பு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார்.
வேலூர் மாவட்டத்திற்கு வரும் 4 ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். வேலூர் கோட்டை மைதானத்தில் 15000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
அதற்காக கோட்டை மைதானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: பரபரப்பு... திடீரென அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன் குவிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்... காரணம் என்ன?
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரைமுருகன் கூறியதாவது: தற்போது அதிக மழை பெய்துள்ளது தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது இதற்கு நதிகள் புணரமைப்பு செய்யப்படுமா என்ற கேள்விக்கு, திட்டமிருக்கிறது இதற்கு சரியாக அமைய வேண்டும் என்றார்.
கடலில் வீணாக தண்ணீர் கலப்பதை தடுக்க புதிய நீர் நிலைகள் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, இந்த தத்துவம் பெரிது தான் இதற்காக அதிகமாக செலவாகும் .இதை நாங்கள் மட்டும் செய்ய முடியாது. இதை படிப்படியாக தான் செய்ய முடியும்.அதற்கான திட்டம் உள்ளது ஆனால் பணம் தான் வேண்டும் என்றார்
வரும் 4 ஆம் தேதி துணை முதல்வர் வேலூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார் 15,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் காலை காட்பாடி பகுதிகளும் மாலை அணைக்கட்டு பகுதியிலும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றார்
வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என அச்சம் உள்ளது என்ற கேள்விக்கு, அச்சம் உண்டு இதனை எந்த ரூபத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என தலைவர் கூறியிருக்கிறார் என்றார்.
அதிக வட மாநில வாக்காளர்கள் இந்த பட்டியல் திருத்திருத்தில் சேர்க்கப்படுவார்கள் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு, ஆமாம் இதுதான் டேஞ்சர் என கூறுகிறேன். ஒரு இடத்தில் 700 முஸ்லிம்கள் இருந்தால் அவர்கள் அனைவரையும் தூக்கி போட்டு விடுவார்கள்.
வட மாநிலத்தவர்களை சேர்த்து விடுவார்கள் அதுதான் பிரச்சனையே ஆண்டாண்டு காலமாக இருந்தவர்கள் பெயரை நீக்கி விடுவார்கள் என்றார்.
இதையும் படிங்க: 4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!