வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

முன்னாள் அமைச்சர் கே என் நேரு மற்றும் 7 பேருக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியாளர்களை நியமித்ததில் பெருமளவில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட 8 பேர் மீது தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 25 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு ஏராளமான ஆவணங்களையும் மின்னணு சாதனங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமையகத்தில் குற்ற எண் 02/2026-ன் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் வரும் பல்வேறு பிரிவுகளுக்கு உதவி பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் வரைவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2,538 பேரைத் தேர்வு செய்ததில் தகுதியற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், வசூலிக்கப்பட்ட அந்த லஞ்சப் பணம் கடந்த 2024–2025-ஆம் ஆண்டுகளில் ஹவாலா வழிகள் மூலமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அறிவாலயத்திற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டிற்குள்ளும் இறங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை…!

இவ்வழக்கின் தொடர்ச்சியாக, இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 25 முக்கிய இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இச்சோதனையின் முடிவில், முறைகேட்டை உறுதிப்படுத்தும் வகையிலான 170 ஆவணங்களும், 13 மின்னணு சாதனங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 25 இடங்களை சுத்துப்போட்ட DVAC… கே.என்.நேருவுக்கு பெரும் நெருக்கடி… ரெய்டின் பகீர் பின்னணி…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी