தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் வேலைவாய்ப்பு ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தத் துறையில் 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமித்ததில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில் 232 பக்க அறிக்கையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக விரிவாக தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் குற்றம் சாட்டி இருந்தது. இந்த நிலையில தான் கடந்த டிசம்பர் 8ம் தேதி இரண்டாவது கடிதத்தை அமலாக்கத்துறை தரப்பில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபிக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் இந்த குடிநீர் வளங்கள் துறையில் அரசு ஒப்பந்தம் அளிப்பதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு அமைப்பது, சாலை போடுதல், நபார்டு திட்டங்கள், தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதல் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் சிறு நிறுவனங்களுக்கு சாதகமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... ஒரே நேரத்தில் 3 அமைச்சர்கள் வீடுகளுக்கு பறந்த போலீஸ் படை...!
யாருக்கு ஒப்பந்தம் என்ற அரசு அறிவிக்கும் முந்தைய நாட்களுக்கு முன்னதாகவே லஞ்சம் மற்றும் ஊழல் பணம் கைமாறி இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக லஞ்ச பணமானது அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கப்படாமல், கட்சி நிதியாகவும் சென்றடைந்து இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் குற்றச்சாட்டப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான போட்டோ ஆதாரங்கள் மற்றும் வாட்ஸ் அப் செட் போன்ற முக்கிய ஆதாரங்களையும் கடிதத்துடன் அமலாக்கத்துறை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் 7.3 முதல் 10 சதவீதம் வரை வந்து கமிஷனாக ஒப்பந்த தொகையில் இருந்து லஞ்சமாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மொத்தம் 20 கோடி ரூபாய் அளவிற்கு இந்த லஞ்ச பணம் மற்றும் கட்சி நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் இருந்து தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபிக்கு இரண்டாவது கடிதமானது அனுப்பப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: "வாக்காளர் பட்டியலில் வடமாநில தொழிலாளர்கள்"... திமுகவினருக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட கே.என்.நேரு...!