ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அவல் பூந்துறையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் மொடக்குறிச்சி தொகுதிக்கு திமுக அரசு எதையும் செய்யவில்லை.. 525 அறிவிப்புகள் திமுக அறிவித்தனர் 10 சதவீதம் கூட நிறைவேற்ற வில்லை. ஆனால் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சை பொய்யை மக்களிடத்தில் தெரிவித்து வருகின்றனர்.
100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவதாக கூறினார்கள், ஆனால் உயர்த்தப்படவில்லை.. ஊதியம் உயர்த்தப்படவில்லை, வேலை செய்தவர்களுக்கும் ஊதியம் தராத அவல நிலை நிலவுகிறது. 2998 கோடி நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து அதிமுக பெற்று தந்தது..
திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. 65% ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி, பருப்பு, சமையல் எண்ணை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் திறமை இல்லாத அரசாக உள்ளது விலையை கட்டுப்படுத்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..
இதையும் படிங்க: காங்கிரஸுக்கு வந்தால் கத்துக்கொடுக்கிறோம்... எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் வகுப்பெடுத்த செல்வப்பெருந்தகை...!
ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கிறது திமுக அரசு. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது..
திறமையற்ற பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. ஊழல் நடைபெறாத துறையே இல்லை.. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு, அன்று முதல் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் ஊழல் கொடி கட்டி பறக்கிறது.
டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது. பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் பத்து ரூபாய் என தற்போது தான் அறிவித்துள்ளார்கள். ஆனால் இதற்கு முன் வாங்கிய பாட்டிலுக்கு நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் அளவிற்கு கிடைத்துள்ளது. வருடம் 4500 கோடி கிடைத்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்த போதே திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் பயம் வந்துவிட்டது.
எங்கள் கட்சி நாங்கள் யாருடனும் கூட்டணி வைப்போம். அதிமுக பாஜக கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.திமுகவில் நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் வாக்குகளை மக்கள் தான் அளிப்பார்கள்.நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சியில் விசுவாசமாக உழைத்தவர்களுக்கு இடம் இல்லை, திமுகவிற்கு ஜால்ரா போடுபவர்கள் மட்டுமே அங்கு தலைவராக வர முடியும் என்ற நிலை உள்ளது என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: ”ஆதரிக்க எடப்பாடியார் போதும்”... இபிஎஸை வரவேற்று தவெகவினர் மீண்டும் பேனர்...!