புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் பிரதமர் மோடியின் கதவை தட்டினார்களே அவர்கள் யாருடைய கதவை தட்டினார்கள். அவர்கள் கதவை தட்டினால் சரி நாங்கள் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தால் தப்பு. இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தானே அமித்ஷா அவர் வேறு யாரும் இல்லையே. இதில் என்ன தவறு இருக்கின்றது என்று புரியவில்லை.
அதிமுக பாஜக கூட்டணியை வெளியில் இருந்து பேட்டி கொடுப்பவர்கள் தான் உடைக்க நினைக்கின்றனர் . பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இருப்பதாக கூறுகிறார் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் அதிமுக பாஜக கூட்டணி. நாங்கள் தெளிவு படுத்தி விட்டோம். சிலவை தான் ஊடகத்தில் பேச முடியும் சிலது பேச முடியாது. ஒரு கட்சி என்றால் சிலதை வெளிப்படுத்தலாம் சிலவற்றை வெளிப்படுத்த முடியாது. எல்லாமே வெளிப்படுத்த வேண்டும் என்று சொன்னால் நடக்காது.
விசிக , தவெக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து எங்கேயாவது நான் வெளிப்படுத்தி உள்ளேன்னா. 46 சட்டமன்ற தொகுதிகளிலும் பேசியுள்ளேன் பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளேன் எங்கேயாவது நான் கூட்டணிக்கு அவர்களை அழைத்தேனா. அவர்கள் தங்களை அடையாளம் படுத்திக் கொள்ள கூறியதை எல்லாம் கேள்வியாக கேட்டால் யுகத்தின் அடிப்படையில் கேட்கின்ற கேள்விக்கு பதில் கூற முடியாது.
இதையும் படிங்க: அடுத்த முதல்வர் உதயநிதி? இபிஎஸ்-க்கு அமைச்சராக ரகுபதி பதிலடி!
அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா வந்த ஒரு ஆண்டு காலம் டெண்டர் விட முடியாததாலும் பயனாளிகளை தேர்வு செய்ய முடியாததாலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்த முடியவில்லை, கொரோனா நேரம் சோதனையான நேரம் அந்த ஒரு ஆண்டு காலத்தை வைத்து வேண்டுமென்றே திட்டமிட்டு இவர்கள் சாக்கு போக்கு சொல்லி தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அப்படியே கைவிட்டு விட்டனர்.
நாங்கள் ஆளுகின்ற கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை அவ்வப்போது ஒன்றிய அரசுக்கு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அதில் எந்த குறைபாடும் கிடையாது.
நாட்டில் நடக்கின்ற பிரச்சனைகளை எடுத்துக் கூறுவது தான் எதிர்க்கட்சியான எங்களின் கடமை. அதை சரி செய்வது இந்த ஆட்சியின் கடமை. ஆனால் ஆட்சியாளர்கள் அதை தட்டி கழிக்கின்றனர். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் 2026 சட்டமன்றத் தேர்தல் வருகின்ற போது மக்கள் தகுந்த பதில் கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: பத்து தோல்வி பழனிச்சாமியின் முகத்திரை கிழிந்தது..! வறுத்தெடுத்த திமுக..!