அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த முதற்கட்ட பிரச்சாரம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களைத் திரட்டவும், திமுக ஆட்சியின் குறைபாடுகளை விமர்சிக்கவும் நோக்கமாகக் கொண்டது.

ஜூலை 7ம் தேதி கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, ஜூலை 8ம் தேதி கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி மூன்றாவது நாளான இன்று (ஜூலை 10) விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: அஜித்குமார் மரணத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு! சந்தேகத்தை கிளப்பும் ஜி.கே.வாசன்.. உண்மை வெளிவருமா?
இந்த சுற்றுப்பயணம் 2025ம் ஆண்டு ஜனவரி முதல் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனமழை பாதிப்புகள், பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள், மாநிலங்களவை தேர்தல், மற்றும் கட்சி நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றால் தள்ளிப்போனது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், பழனிசாமி தனது கட்சியின் செல்வாக்கை மீட்டெடுக்கவும், திமுகவுக்கு எதிராக மக்கள் ஆதரவைப் பெறவும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இன்று (புதன் கிழமை) காலை பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு, சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பகுதியில் உள்ள முத்துமலை முருகன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவருக்கு, அவரது இந்த சுற்றுப்பயணம் மாபெரும் வெற்றி பெற்று, மக்களின் பேராதரவு கிடைக்க வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்ட வெள்ளி வாள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான இளங்கோவன், கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ஜெயசங்கரன், கங்கவல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் இளம்பை ஆர். தமிழ்ச்செல்வன், வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா (எ) ராஜமுத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. எடப்பாடிக்கு Z+ பாதுகாப்பை வரவேற்கும் R.B.உதயகுமார்