பொங்கல் பண்டிகை தமிழர்களின் வாழ்க்கையில் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒரு திருவிழா. அறுவடை முடிந்து, வயல்களில் உழைத்த உழவர்களின் உழைப்புக்கு நன்றி சொல்லும் நாட்கள் அவை. தை மாதம் பிறக்கும் போது தொடங்கும் இந்தப் பண்டிகை நான்கு நாட்கள் நீடிக்கும். போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று ஒவ்வொரு நாளும் தனித்தனி பொருள் கொண்டது. ஆனால் இதில் மிகுந்த உற்சாகமும், வீரமும், கிராமங்களின் துடிப்பும் நிறைந்திருப்பது மாட்டுப்பொங்கல் நாளில் நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்வுதான்.
மஞ்சு' என்றால் காளை அல்லது ஏறு என்று பொருள். 'விரட்டு' என்றால் விரட்டிச் சென்று பிடிப்பது. பழங்காலத்தில் இது மிக எளிமையான விளையாட்டாக இருந்தது. காளையின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பொருட்களை எடுப்பதற்காக இளைஞர்கள் விரட்டிச் சென்று பிடிப்பார்கள். பின்னர் இது வீர விளையாட்டாக மாறியது. காளையை நெருங்கி, அதன் திமிலைப் பிடித்து, தொங்கிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தூரம் செல்வது, அல்லது காளையை கட்டுப்படுத்துவது என்று பல வகைகள் உருவாகின.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தன. ஆனால் சேலத்தில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு நடைபெற்ற நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கணவருக்கு தாலி பார்சல்… தகாத உறவில் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன்…!
சிவகங்கை மாவட்டம் சிரா வயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 123 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலக புகழ் பெற்ற சிறாவையில் மஞ்சுவிரட்டில் 217 காளைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம்... தவெக தூய சக்தியா? சேலத்தில் EPS பிரஸ் மீட்...!