மதுரை மாவட்டம் மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற முழக்கத்தோடு அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டணி கட்சி களின் பெயரை உச்சரித்து வரவேற்று பேசிய எடப்பாடி அமமுக பெயரை உச்சரிக்காமல் தவிர்த்தார்.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இரண்டாம் கட்ட பரப்புரையாக நேற்று திருப்பரங்குன்றம் திருமங்கலம் திருச்சுழி ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.
இதில் மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பரம்பரையில் மேலூர் தொகுதிக்கு அதிமுக சார்பில் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து பேசியவர், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரைத் தேக்க அதிமுக பாடுபடும் என்றும், அதிமுக ஆட்சி அமைந்த உடன் வைகை அணையை தூர்வாரி அணையின் முழு கொள்ளளவான 71 அடி நீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசினார்.
இதையும் படிங்க: “அவரு வர்ல, உங்களுக்கு எதுவுமே இல்ல” ... டிடிவி-க்கு ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்ட பாஜக தலைமை... இபிஎஸுக்கு எதிராக அசைன்மெண்ட்...!
மேலும் கிராமப்புற மக்களின் நலன் கருதி நான்காயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் எனவும், பெண்களுக்கு தீபாவளிக்கு இலவச சேலை வழங்கப்படும் எனவும் பேசினார். முன்னதாக கூட்டணி கட்சியான பாஜக பார்வட்பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் பெயரை உச்சரித்து பேசிய எடப்பாடி, மேலூர் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 30,000 வாக்குகள் வாங்கி பெரும்பான்மையாக உள்ள அமமுக பெயரை உச்சரிக்காமல் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடைய எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும் பொழுது கூட்டத்திற்காக அழைத்துவரப்பட்ட பொதுமக்கள் ஆங்காங்கே கலைந்து சென்றது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜயகாந்தை போல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்… நம்ம தயாராகனும்! டிடிவி தினகரன் பேச்சு..!