பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு 7 கோடி வாக்காளர் இருக்கின்ற அந்த மாநிலத்தில ஏறத்தாழ ஒரு 67% வாக்குகள் பதிவாகி இருந்தன. பீகாரில் இருக்கக்கூடிய இந்த 38 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 46 மையங்களிலும் இந்த 67 சதவீத வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் தற்பொழுதும் போட்டியில் இருக்கின்றார். அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி உள்ளார். இன்று பீகார் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தொடர்ந்து பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் மீண்டும் பாஜக அரியணை ஏறுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் பொய்களையும், ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பீகார் மக்கள் அதற்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நியாயமா நடந்தா காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும்... பீகார் காங். தலைவர் ஓபன் டாக்...!
கூட்டணியின் கூட்டுத் தலைமை மற்றும் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது என கூறினார். இந்த வெற்றியைப் பெறுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த வலுவான தீர்ப்பு பீகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும் என்று நம்புகிறேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பரபரக்கும் பீகார்... நாளை தேர்தல் முடிவுகள் வெளியீடு... வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை...!