2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். திமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாகவும் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் கனிமொழி எம்பி குறித்தும் அவர் விமர்சனம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தேர்தல்கள் பெண்கள் குறித்து எப்படி பேச வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது என்று கூறினார்கள்.

முதல்வர் ஸ்டாலின் கனிமொழி உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரக்குறைவாக விமர்சிக்கிறார் என்று கூறினர். தேர்தல் கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கனிமொழி குறித்து அவதூறாக பேசி வருகிறார் என்று கனிமொழி சோமு தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரங்களில் தரக்குறைவாக பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின் "சூப்பர் ஸ்டார்"..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!
கனிமொழி குறித்து அவதூறாக பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். தேர்தல் காலத்தில் பிரச்சாரத்தில் இபிஎஸ் தொடர்ந்து கனிமொழி குறித்து பேசிய நிலையில் அதிமுக பெண்களை அவமதிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு போய் விடுவோமோ என்ற பயத்தில் எடப்பாடி பழனிச்சாமி இது போல பேசி வருவதாக தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சித்தார்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும்..! அண்ணா நகர் வேட்பாளருக்கு உதயநிதி வாக்கு சேகரிப்பு..!!